ஓவியத்தை வரைந்த பள்ளி மாணவிக்கு மோடி நன்றி

ஓவியத்தை வரைந்த பள்ளி மாணவிக்கு மோடி நன்றி

1 mins read
2309377b-dbb9-443d-9072-e171307a07b6
கொரோனா கிரு­மிக்கு எதி­ரா­கப் போரா­டும் பிர­த­மர் மோடி­யைக் கௌர­வப்­ப­டுத்­தும் வகை­யில் 12ஆம் வகுப்பு மாணவி ஒரு­வர் அவ­ரது ஓவி­யத்தை வரைந்­தி­ருந்­தார். தீபா எனும் ஆசி­ரி­யர் தனது மாணவி ஸ்வேதா என்­ப­வர் வரைந்த மோடி­யின் பென்­சில் ஓவி­யத்தை (படம்) டுவிட்­ட­ரில் பகிர்ந்­தி­ருந்­தார்.படம்: ஊடகம் -

புது­டெல்லி: கொரோனா கிரு­மிக்கு எதி­ரா­கப் போரா­டும் பிர­த­மர் மோடி­யைக் கௌர­வப்­ப­டுத்­தும் வகை­யில் 12ஆம் வகுப்பு மாணவி ஒரு­வர் அவ­ரது ஓவி­யத்தை வரைந்­தி­ருந்­தார். தீபா எனும் ஆசி­ரி­யர் தனது மாணவி ஸ்வேதா என்­ப­வர் வரைந்த மோடி­யின் பென்­சில் ஓவி­யத்தை (படம்) டுவிட்­ட­ரில் பகிர்ந்­தி­ருந்­தார். அதில் "தொற்­று­நோய்க்கு எதி­ரான இந்­தி­யா­வின் போராட்­டம் ஒரு பென்­சில் ஸ்கெட்ச் மூலம் பிர­த­ம­ருக்கு நன்றி தெரி­விக்க என்­னைத் தூண்­டி­யது," என தனது மாணவி கூறி­யதை பதி­விட்டு, மோடியை அடை­யும் வரை அவர் பகி­ரச் சொல்லி கேட்­டுக்­கொண்­ட­தா­க­வும் பதி­விட்­டி­ருந்­தார். "அவ­ரது இந்த அன்­பான மற்­றும் புது­மை­யான செய­லுக்கு ஸ்வே­தா­வுக்கு நன்றி தெரிவி யுங்­கள். அவ­ரது மதிப்­பு­மிக்க வாழ்த்­து­கள்­தான் மகத்­தான வலி­மை­யின் ஆதா­ரம்" என மோடி நன்றி தெரி­வித்து பதி­லுக்கு டுவிட் செய்து மாண­வியை ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளார்.