அமைச்சர் பதவியை விட்டு விலக முடிவு

புதுச்­சேரி: துணை நிலை ஆளு­நர் கிரண்­பே­டி­யின் தலை­யீட்­டால் ஒரு அமைச்­ச­ராக தமது விருப்­பம்­போல் சுதந்­தி­ர­மா­கச் செயல்­பட முடி­ய­வில்லை என புதுச்­சேரி சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் மல்­லாடி கிருஷ்­ணா­ராவ் குற்­றம்­சாட்டி உள்­ளார்.

ஒரு அமைச்­ச­ராக எதை­யும் செய்­ய­மு­டி­யா­மல் இருப்­ப­தால் தான் வகித்­து­வ­ரும் அமைச்­சர் பத­வியிலிருந்து விலகி­விட முடிவு செய்­துள்­ள­தா­க­வும் இதற்கு ஒரு எம்­எல்­ஏ­வாக இருந்துவிட்டுப் போக­லாம் என்­றும் கிருஷ்­ணா­ராவ் தெரி­வித்­துள்­ளார்.

செய்­தி­யா­ளர்­களிடம் கிருஷ்­ணா­ராவ் நேற்று பேசுகை­யில், “கிரண்­பேடி சொல்வதையே அதி­கா­ரி­கள் செவி மடுக்கிறார்­கள். அர­சின் முடி­வு­களை ஒரு­வ­ரும் செயல்­ப­டுத்­து­வது இல்லை.

“வெளி­மா­நி­லங்­களில் தங்­கிப் பணி­பு­ரிந்த 16 பேர் நடை­ப­ய­ண­மாக புதுச்­சே­ரி­யில் உள்ள தங்­கள் சொந்த ஊரான ஏனாம் மாவட்­டத்­திற்கு வந்­த­னர். இந்த 16 பேரையும் ஊருக்­குள் அனு­ம­திக்­கக்­கூ­டாது என அதி­கா­ரி­க­ளுக்­குக் கிரண்­பேடி உத்­த­ர­விட்­டுள்­ளார்.

“அவர்­கள் எங்­கி­ருந்து வந்­தார் களோ அங்­கேயே திருப்பி அனுப்­பும்­படி கோதா­வரி மாவட்ட ஆட்­சி­ய­ருக்கு கிரண்­பேடி தரப்­பில் கடி­தம் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

“இது கிரண்­பே­டி­யின் பழி­வாங்­கும் நட­வ­டிக்­கை­யைக் காட்­டு­கிறது. ஏனாம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­களை 24 மணி­நே­ரத்­தில் உள்ளே வர கிரண்­பேடி அனு­ம­திக்­கா­விட்­டால் எனது அமைச்­சர் பத­வியை விட்டு விலகுவேன்,” என்று கிருஷ்­ணா­ராவ் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!