மும்பை: ஊரடங்கின் போது சிங்கப்பூரில் இருந்து 243 பேர் மும்பைக்கு அழைத்து வரப்பட்டதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 10 நாடுகளில் தவித்த 1,972 இந்தியர்கள் 13 சிறப்பு விமானங்களில் மும்பை அழைத்து வரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"லண்டனில் இருந்து 653 பேரும், மணிலாவில் இருந்து 150, சான் பிரான்சிஸ்கோ மற்றும் டாக்காவில் இருந்து தலா 107, நியூயார்க்கில் இருந்து 208, கோலாலம்பூரில் இருந்து 201, சிகாகோவில் இருந்து 195, குவைத்தில் இருந்து 2, அடிஸ்அபபாவில் இருந்து 78, காபூலில் இருந்து 12, மஸ்கட்டில் இருந்து 16 பேரும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களில் 822 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்ட அவர், 1,025 பேர் மராட்டியத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், 125 பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மும்பைக்கு அழைத்து வர மேலும் 27 விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
மும்பை மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மும்பையில் உள்ள தங்குவிடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டதாக முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

