தெலுங்கானா: ஒரே கிணற்றில் 9 சடலங்கள்

வாரங்கல்: தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கோரே குந்தா என்ற கிராமத்தில் செயல்படும் பை தயாரிக்கும் தொழிற்சாலை அருகே ஒரு கிணற்றில் இரு நாட்களில் மொத்தம் ஒன்பது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்பதைக் கண்டுபிடிக்க போலிஸ் விசாரணையைத் தொடங்கி இருக்கிறது.

கிணற்றில் செத்து மிதந்தவர்கள் வெளிமாநிலத் தொழிலாளர்கள் என்று தெரிகிறது. மாண்டவர்களில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் அடங்குவர்.

பீகார் உள்ளிட்ட இதர மாநிலங்களைச் சேர்ந்த வர்களும் மாண்டவர்களில் சிலர் என்று கூறப்படுகிறது.