சுடச் சுடச் செய்திகள்

தமிழகத்தில் கிருமித்தொற்று எண்ணிக்கை 15,000ஐ கடந்தது; சென்னையில் ஆயிரத்தை நெருங்குகிறது

தமிழகத்தில் இன்று (மே 23) 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 49 பேர் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் தமிழகத்துக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பாதிக்கப்பட்ட கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 624 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 9,989 ஆக உயர்ந்திருக்கிறது.

363 பேர் இன்று கொரோனா தொற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை7,491 ஆக உள்ளது. 

இன்று உயிரிழந்த ஐவரையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை 103 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 12,155 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. 

கொரோனாவை பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 41 அரசு மற்றும் 27 தனியார் என 68ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon