முடிதிருத்தகம், அழகு நிலையங்கள் இன்று திறப்பு

சென்னை: சென்னை நகரைத் தவிர தமிழகம் முழுவதும் முடிதிருத்தகம், அழகு நிலையங்களை இன்று 24ஆம் தேதி முதல் திறந்து சேவை வழங்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முடிதிருத்த கம், அழகு நிலையங்கள் இன்றுமுதல் தினமும் காலை 7 முதல் இரவு 7 மணி வரை மட்டும் இயங்கலாம்.

“இங்கு பணிபுரியும் பணியாளர்களும் வாடிக்கை யாளர்களும் சமூக இடை வெளியைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்களை அனு மதிக்கக்கூடாது.

“வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். கடையில் குளிர்சாதன வசதியை கண்டிப்பாக உபயோகப் படுத்தக்கூடாது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.