மார்ச் 24ஆம் தேதியே ஊரடங்கு நடப்புக்கு வரவில்லையெனில் 78,000 பேரை இழந்திருக்கக்கூடும்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று பர­வாமல் தடுப்­ப­தற்­காக மார்ச் 24ஆம் தேதியே ஊர­டங்கு நடப்­புக்கு வந்து­விட்­டது.

இல்­லை­யென்­றால் நாட்­டில் 18 லட்­சம் மக்­க­ளைக் கிருமி தொற்றி இருக்­கும் என்­றும் 78,000 பேர் மர­ண­ம­டைந்து இருக்­கக்­கூ­டும் என்­றும் அர­சு தெரி­வித்து உள்ளது.

மூன்று கணக்­கீ­டு­க­ளின் அடிப்­படை­யில் இந்த முடி­வுக்கு வந்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அர­சாங்­கம், ஆனால் அந்­தக் கணக்­கீ­டு­கள் பற்­றிய முழு விவ­ரங்­க­ளைத் தெரி­விக்­க­வில்லை.

மும்பை, டெல்லி, சென்னை, அக­ம­தா­பாத், தானே ஆகிய ஐந்து நகர்­க­ளில்­தான் கிரு­மித்­தொற்று இப்­போது அதி­கம் இருப்­ப­தா­க­வும் மொத்­தம் பாதிக்­கப்­ப­டு­வோ­ரில் 60 விழுக்­காட்­டி­னர் இந்த நகர்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் மத்திய அர­சாங்­கம் குறிப்­பிட்டு உள்­ளது.

கிருமி தொற்­றி உள்­ள­வர்­களில் 80 விழுக்­காட்­டி­னர் மகா­ராஷ்­டிரா, தமிழ்­நாடு, குஜ­ராத், டெல்லி, மத்­தி­யப்­ பி­ர­தே­சம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

மகா­ராஷ்­டி­ரா­வின் தாராவி குடி­சைப் பகு­தி­யில் நேற்­றுக் காலை நில­வ­ரப்­படி 1,478 பேரைக் கிருமி தொற்றி இருந்­தது.

இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. கடந்த இரண்டு நாட்­களாக அங்கு தொற்று மிக­வும் கூடி­விட்­டது. வெள்­ளிக்­கி­ழமை 6,654 பேரைக் கிருமி தொற்­றி­யது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 125,101 ஆகக் கூடி­யது. 51,784 பேர் குண­ம­டைந்து இருக்­கி­றார்­கள். கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு 3,720 பேர் பலி­யாகி­விட்­ட­தாக நேற்­றுக் காலை நில­வ­ரங்­கள் காட்­டின.

இத­னி­டையே, இந்­தி­யா­வில் வெள்­ளிக்­கி­ழமை மட்­டும் 1.15 லட்சம் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக மத்­திய மருத்­துவ ஆய்வு மன்­றம் அறி­வித்­தது. மொத்­தம் 2.84 மில்லியன் ரத்த மாதி­ரிகள் சோதிக்­கப்­பட்டு இருக்­கின்­றன என்றும் அது தெரி­வித்தது.

இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மிப் பர­வ­லைத் தடுப்­ப­தற்­காக மார்ச் 24ஆம் தேதி நாடு தழு­விய ஊர­டங்கு நடப்­புக்கு வந்­தது. அதன்­பி­றகு ஊர­டங்கு மூன்று முறை நீட்­டிக்­கப்­பட்டு இம்­மா­தம் 31ஆம் தேதி வரை அது நடப்­பில் இருந்து வரு­கிறது.

இருந்­தா­லும் மூன்­றா­வது மற்­றும் நான்­கா­வது கட்ட ஊர­டங்கு கால­கட்­டத்­தின்போது பல கட்­டுப்­பா­டு­களும் தளர்த்­தப்­பட்­டன. ஊர­டங்கு நடப்­புக்கு வந்து இரண்டு மாதங்­கள் ஆகி­விட்ட போதி­லும் கிருமி இன்­ன­மும் ஒழிந்­த­பா­டில்லை.

அதுவும் கடந்த சில நாட்களாக தொற்று இதுவரை இல்லாத அளவுக்கு கூடிவிட்டது. ஆனாலும் பலி எண்ணிக்கை அளவு குறைவாக இருக்கிறது என்றும் குணமடைவோர் 41% என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!