உ.பி.க்குச் செல்லாமல் ஒடிசாவுக்குச் சென்ற ரயில்; பயணிகள் தவிப்பு

மும்பை: கொரோனா ஊர­டங்கு கார­ண­மாக மகா­ராஷ்­டி­ரா­வில் சிக்­கிக்­கொண்ட ஏரா­ள­மான உத்­த­ரப்­பி­ர­தேச ஊழி­யர்­கள் தங்­கள் ஊருக்­குத் திரும்­பிச் செல்ல பல நாட்­க­ளாக இன்­ன­மும் காத்­துக் கிடக்­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில் அவர்­களில் நூற்­றுக்­க­ணக்­கான தொழிலாளி களுக்குக் கடை­சி­யாக ஒரு ரயிலில் இடம் கிடைத்­தது.

ரயி­லில் பல­ரும் நின்று கொண்டு­தான் செல்லவேண்­டும் என்ற நிலை இருந்­தா­லும் சொந்த ஊருக்­குத் திரும்­பு­வதை நினைத்து அவர்­கள் மகிழ்ந்­த­னர். ரயில் வியா­ழக்­கி­ழமை மகா­ராஷ்­டி­ரா­வில் உள்ள வாசி என்ற நிலை­யத்­தில் இருந்து புறப்­பட்­டது.

சுமார் 750 கி.மீ. தொலைவு சென்ற பிறகு பொழுது விடிந்த நேரத்­தில் ஒரு நிலை­யத்­தில் ரயில் நின்­றது. தங்­கள் ஊர் வந்து விட்­டது என்ற மகிழ்ச்­சி­யில் ரயி­லில் இருந்த உத்­த­ரப் ­பி­ரே­தேச மக்­கள் உற்­சா­க­மாக அடித்­துப்­பி­டித்­துக் கொண்டு தரை இறங்­கி­னர்.

ஆனால் அவர்­கள் இறங்­கிய நக­ரம் ஒடி­சா­வில் உள்ள ரூர்­கேலா என்­பது தெரிந்து பல­ரும் கோப மடைந்து கொதித்து எழுந்து சத்­தம் போட்டு அழுது புலம்­பி­னர்.

அதி­கா­ரி­க­ளைக் கேட்­ட­போது ரயிலை ஓட்­டிவந்­த­வர் தவ­று­த­லாக ஒடி­சா­வுக்கு ஓட்டி வந்­து­விட்­ட­தாகக் கூறி­னர். பிறகு அதை­மறுத்த ரயில்வே துறை, சில சிறப்பு ரயில்­கள் திசை மாற்றி விடப்­பட்­டதே கார­ணம் என்­ற­து.

எப்­போ­து­தான் சொந்த ஊருக்­குப் போக முடி­யும் என்று அவர்கள் கேட்­ட­தற்கு, இப்­போ­தைக்கு எதை­யுமே உறு­தி­யா­கக் கூற முடி­யாது என்று அதி­கா­ரி­கள் கைவிரித்­து­விட்­டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!