கொரோனா தொற்றுப் பிரச்சினை: மீண்டுவர திட்டம் இன்றி அரசு திணறல் - 22 கட்சிகள் புகார்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் முன்­பின் ஆரா­யா­மல் மத்­திய அர­சாங்­கம் ஊர­டங்கை நடப்­புக்­குக் கொண்டு வந்­த­தா­க­வும் ஆழம் தெரி­யா­மல் காலை­விட்டு அவ­திப்­படும் நிலை­யைப் போல பொரு­ளி­யல் மீட்­சிக்­கான திட்­டம் எது­வும் இல்­லா­மல் அர­சாங்­கம் திண­று­வ­தா­க­வும் எதிர்க்­கட்­சி­கள் சாடி உள்ளன.

கொரோனா கிரு­மித்­தொற்று சூழ­லில் ஊர­டங்கு, வெளி­மா­நி­லத் தொழி­லா­ளர்­கள் படும் சிர­மங்­கள், பொரு­ளி­யல் பாதிப்பு, வேலை­ இழப்பு உள்­ளிட்ட பல்­வேறு பிரச்சினை­கள் கிளம்பி உள்ளன.

இவை பற்றி விவா­திப்­ப­தற்­காக காங்­கி­ரஸ் கட்­சித் தலைவி சோனியா காந்தி தலை­மை­யில் 22 அர­சி­யல் கட்­சி­கள் இணை­யக் காணொளி வழி மாநாடு நடத்­தின.

அதில் மத்­திய அர­சாங்­கத்தை வசை­பாடி எதிர்க்­கட்­சி­கள் பல புகார்­க­ளை­யும் முன்­வைத்­தன.

அண்­மை­யில் ஒடிசா, மேற்கு வங்­கா­ளத்­தைத் தாக்­கிய அம்­பன் புயல் பாதிப்பை தேசியப் பேரி­ட­ராக அறி­விக்க வேண்­டும் என்று எதிர்க்­கட்­சி­கள் தீர்­மா­னம் நிறை­வேற்­றின.

மாநாட்டில் கலந்துகொண்ட திரிணாமுல் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளின் தலைவர்கள் அனை­வ­ருமே மத்­திய அர­சைப் பல கோணங்­க­ளி­லும் சாடினர்.

தலை­வர்­களிடையே பேசிய சோனியா காந்தி, எந்தக் கார­ணத்­திற்­காக ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­படு­கிறது என்­பதைத் தெரிந்து கொள்­ளா­ம­லேயே மத்­திய அர­சாங்கம் ஊர­டங்­கைச் செயல்­ப­டுத்தி இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

அதி­லி­ருந்து வெளி­யேறி பொரு­ளி­யலை ஊக்­கு­விப்­பது எப்­படி என்­பது தெரி­யா­மல் இதற்­கான திட்­டம் எது­வும் இல்­லா­மல் மத்­திய அரசு திண­று­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

எல்லா அதி­கா­ரங்­க­ளை­யும் பிர­த­மர் அலு­வ­ல­கமே குவித்து வைத்­துக்­கொண்டு கூட்­டாட்சி முறையை மறந்­து­விட்டு ஜன­நா­ய­கத்தை அறவே கைவிட்­டு­விட்டு ஆட்­சியை பாஜக நடத்­து­கிறது என்­றாரவர்.

பிர­த­மர் மோடி, மே மாதம் 18ஆம் தேதி அறி­வித்த ரூ.20 லட்­சம் கோடி பொரு­ளி­யல் ஊக்­கு­விப்­புத் திட்­ட­மும் அதன் பிறகு நிதி அமைச்­சர் அளித்த விளக்­கங்­களும் மிகக் கொடூ­ர­மான நகைச்­சு­வை­கள் என்று சோனியா வர்­ணித்­தார்.

இப்­போ­தைய பாஜக அர­சாங்­கம் எந்­த­வொரு பிரச்­சி­னை­யி­லும் அரசியல் கட்­சி­களைக் கலந்து ஆலோ­சிப்­பதே இல்லை என்று குறிப்­பிட்ட காங்­கி­ரஸ் தலைவி, பொதுத் துறை நிறு­வ­னங்­களை விற்­பது முதல் தொழி­லா­ளர் சட்­டங்­களை ரத்து செய்­வது வரை அர­சாங்­கம் தன்­னிச்­சை­யா­கவே செயல்­பட்டு வரு­கிறது என்­றார்.

இந்­தியப் பொரு­ளி­யல் படு மோசமான நிலை­யில் தொடர்ந்து இருப்­ப­தா­க­வும் அது தொடர்ந்து இறங்­கு­மு­க­மாகி வரு­வ­தா­க­வும் குறிப்­பிட்ட அவர், இந்­தப் பேர­ழிவை பாஜக அரசு கண்­டு­கொள்­வதே இல்லை என்­றார்.

கொரோனா கிரு­மிக்கு எதி­ரான போர் 21 நாட்­களில் முடிந்துவிடும் என்று பிர­த­மர் கணித்து கூறி­யது எந்த அள­வுக்­குப் பொய் என்­பதை மக்­கள் இப்­போது உணர்­கி­றார்­கள் என்று குறிப்­பிட்ட சோனியா, தடுப்பு மருந்து கண்­டு­பி­டிக்­கப்­படும் வரை கொரோனா இந்­தி­யா­வை­விட்டு போகாது என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!