நிவாரணப் பணிகள் மந்தமாக நடைபெறுகிறது என கோல்கத்தாவில் ஆர்ப்பாட்டம்

கோல்­கத்தா: கொரோனா கிரு­மித்­தொற்று மற்­றும் ஊர­டங்கு கார­ண­மாக முடங்­கிப் போய் இருந்த மேற்கு வங்­கா­ளத்­தைச் சில நாட்­களுக்கு முன் அம்­பன் புயல் சீரழித்து­விட்­டது.

புயல் அடித்து மூன்று நாட்­கள் ஆகி­விட்­டா­லும் அர­சாங்­கம் போதிய வேகத்­தில் நிவா­ர­ணப் பணி­களை மேற்­கொள்­ள­வில்லை என்று கூறி கோல்­கத்தா நக­ரின் பல இடங்­க­ளி­லும் நேற்று ஆயிரக் கணக்­கான மக்­கள் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர்.

புய­லால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் மரங்­களை அகற்­று­வது, மின்­சா­ரத்தை வழங்­கு­வது, குடி­நீர் போன்ற வச­தி­களை ஏற்­ப­டுத்­தித் தரு­வது முத­லான காரி­யங்­களை அர­சாங்­கம் விரைந்து செய்­ய­வில்லை என்று போராட்­டக்­கா­ரர்­கள் புகார் தெரி­வித்­த­னர்.

இந்­நி­லை­யில், அந்த மாநில முதல்­வர் மம்தா பானர்ஜி நேற்று புயல் பாதித்த இடங்­க­ளை­ச் சுற்றிப் பார்த்து நிவா­ர­ணப் பணி­களை முடுக்­கி­விட்­டார்.

புயல் கார­ண­மாக மேற்கு வங்­கா­ளத்­தில் 85 பேர் மாண்­டு­விட்­ட­தா­கத் தெரி­வித்த முதல்­வர், மாநிலத்தின் இப்போதைய சிரம மான காலகட்டத்தை மனதில் கொண்டு வெளி­மா­நி­லத் தொழி­லா­ளர்­க­ளுக்­கான சிறப்பு ரயில்களை மே மாதம் 26ஆம் தேதி வரை மேற்கு வங்­கா­ளத்­துக்கு அனுப்ப வேண்­டாம் என்று மத்­திய அர­சுக்கு கோரிக்கை விடுத்­தார்.

புயல் காரணமாக 1 டிரிலியன் ரூபாய் (S$18.5 பில்லியன்) சேதம் ஏற்பட்டு இருப்பதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!