திருமணத்துக்காக 80 கிலோ மீட்டர் நடந்த மணமகள்

திருமணத்துக்காக 80 கிலோ மீட்டர் நடந்த மணமகள்

1 mins read
140341be-ea28-44d6-a03a-f6fcea1ae59a
மணமகன் வீரேந்திர குமார், மணமகள் கோல்தி.  படம்: ஊடகம் -

கொரோனா விவகாரத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை அடுத்து பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களால் சொந்த ஊர் திரும்ப முடியவில்லை.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான கோல்தி என்ற இளம்பெண் சுமார் 80 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று தன் வாழ்க்கைத் துணையைக் கைபிடித்துள்ளார்.

இவருக்கும் வீரேந்திர குமார் என்பவருக்கும் மே 4ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஆனால் ஊரடங்கு காரணமாக திருமணம் தள்ளிப்போனது.

ஊரடங்கு முடிவுக்கு வருவதற்கான அறிகுறி தெரியாததால், பொறுமை இழந்த கோல்தி, மணப்பெண் கோலத்தில் தான் வசிக்கும் கான்பூர் நகரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே சென்று கன்னோஜ் பகுதியில் உள்ள மணமகன் வீரேந்திர குமார் வீட்டைச் சென்றடைந்தார்.

இதனால் மணமகன் வீட்டார் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இருதரப்பினரும் ஒப்புக்கொண்டதை அடுத்து குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்கள் முன்னிலையில் கோயிலில் திருமணம் நடந்தது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online