'கொரோனா முடிவைப் பொறுத்தே எதிர்கால நடவடிக்கைகள்'

'கொரோனா முடிவைப் பொறுத்தே எதிர்கால நடவடிக்கைகள்'

1 mins read
2ce97442-87cd-462e-8034-2dfbe51c83bc
-

புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் எப்போது முடிவுக்கு வரும் என்று தெளிவாகத் தெரியாத நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் எனக் கணிப்பது மிகச் சிரமம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

"அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளோம். ஊரடங்கு முடிந்த பிறகு இப்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து இந்திய நிறுவனங்கள் மீளும் என உறுதியாக நம்புகிறோம்.

"கொரோனா விவகாரத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி முடிவுக்கு வருவதைப் பொறுத்தே எதிர்காலத்தில் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள், நிதிக் கொள்கைகள், நடவடிக்கைகள் இருக்கும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.