அபுதாபியில் இந்திய ஆசிரியர் கிருமித்தொற்றால் உயிரிழப்பு

அபுதாபியில் இந்திய ஆசிரியர் கிருமித்தொற்றால் உயிரிழப்பு

1 mins read
ae5dac81-bac0-4cb4-ba24-085a5798bd00
திரு அனில் குமாரின் மறைவால் பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் துக்கத்தில் ஆழ்ந்திருப்பதாகக் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. படம்: தகவல் ஊடகம் -

அபுதாபியில் பணிபுரிந்து வந்த இந்திய ஆசிரியர் கொவிட்-19ஆல் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளால் உயிரிழந்தார்.

அங்கிருக்கும் 'சன்ரைஸ் பள்ளி'யில் மூத்த இந்தி ஆசிரியராகப் பணியாற்றி வந்த 50 வயதான அனில் குமார் நேற்று (மே 24) காலை உயிரிழந்தார்.

திரு அனில் குமாரின் மறைவால் பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் துக்கத்தில் ஆழ்ந்திருப்பதாகக் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

திரு அனில் குமாரின் மனைவி ரஞ்சனியும் அதே பள்ளியில் கணிதத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

திரு அனில் குமாருக்கு இம்மாதம் 7ஆம் தேதி கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது; அப்போதிருந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்