திருவனந்தபுரம்: கேரளாவில் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பும் ஆட்களால் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் கேரளாவில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் 18 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். 25 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். கேரளாவில் கொரோனாவுக்கு இப்போ 359 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் கொரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா
1 mins read
அரபு நாடுகளில் இருந்து கொச்சின் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கியவர்கள் பேருந்து மூலம் தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர். படம்: ஏஎப்பி-அருண்சந்திர பாஸ் -

