புதுடெல்லியில் நிலைமை கட்டுக்குள் தான் உள்ளது - முதல் அமைச்சர் கெஜ்ரிவால்

புதுடெல்லியில் நிலைமை கட்டுக்குள் தான் உள்ளது - முதல் அமைச்சர் கெஜ்ரிவால்

1 mins read
5dc86a62-c865-4bab-ac89-fc9a6f44153d
டெல்லியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கொவிட்-19 நோய் கண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனினும் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. எனவே நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது. கவலைப்படத் தேவையில்லை என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மேலும் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் ஒருவர் பாதுகாப்பு முகக் கேடயம் அணிந்து செல்கிறார். படம்: இபிஏ -

புதுடெல்லி: ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதிலும் டெல்லியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தற்போது அம்மாநிலத்தில் உள்ள தனிமைப்படுத்தும் மையங்களில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கண்காணிப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கொவிட்-19 நோய் கண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனினும் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. எனவே நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது. கவலைப்படத் தேவையில்லை," என முதல்வர் கெஜ்ரிவால் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக எழுப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் கெஜ்ரிவால், அம்மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.