நான்கு நகரங்களைப் பாராட்டிய மத்திய அரசு

நான்கு நகரங்களைப் பாராட்டிய மத்திய அரசு

1 mins read
9cfa5d38-757a-4055-9b79-f1ad22386c83
பெங்களூரு அனைத்துலக விமான நிலையத்தில் உள்நாட்டு விமானச் சேவைக்காக காத்திருக்கும் பயணிகளிடம் வெப்பநிலையைச் சரிபார்க்கும் விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள். படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: கொரோனா கிரு­மித்­தொற்று விவ­கா­ரத்தை எதிர்­கொண்டு கையாள்­வ­தில் நாடு முழு­வ­தும் பெங்­க­ளூரு உள்­ளிட்ட நான்கு நக­ரங்­கள் சிறப்­பா­கச் செயல்­பட்­டி­ருப்­ப­தாக மத்­திய அரசு பாராட்டு தெரி­வித்­துள்­ளது.

இந்த நான்கு நக­ரங்­களும் மற்ற நக­ரங்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக திகழ்­வ­தா­க­வும் மத்­திய அரசு குறிப்­பிட்­டுள்­ளது.

கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது. சென்­னை­யில் சுமார் 16 ஆயி­ரம் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். எனி­னும் இறப்பு விகி­தம் மிக­வும் குறை­வா­கவே உள்­ளது.

சென்னை, பெங்­க­ளூரு ஆகிய பெரு நக­ரங்­க­ளி­லும் நோய்த்­தொற்­றால் இறப்­போர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­காத வகை­யில் நட­வ­டிக்கை எடுக்க முடி­யும் என இவ்­விரு நக­ரங்­களும் நிரூ­பித்து இருப்­ப­தாக மத்­திய அரசு கூறி­யுள்­ளது.

இதே போல் ஜெய்ப்­பூர், இந்­தூர் ஆகிய இரு நக­ரங்­களும் பல்­வேறு புது முயற்­சி­க­ளின் துணை­யோடு நோய் தொற்­றி­யோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கா­மல் தடுத்­தி­ருப்­ப­தாக நகர நிர்­வா­கத்­துக்கு மத்­திய அரசு பாராட்டு தெரி­வித்­துள்­ளது.

தேசிய அள­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றின் இறப்பு விகி­தம் மூன்று விழுக்­கா­டாக உள்ள நிலை­யில், சென்னை, பெங்­க­ளூரு ஆகிய இரு நக­ரங்­க­ளி­லும் இறப்பு விகி­த­மா­னது ஒரு விழுக்­கா­டாக உள்­ளது.

கடந்த சில நாட்­க­ளாக பல்­வேறு உள்­ளாட்சி அமைப்­பு­க­ளு­ட­னும் நடை­பெற்ற ஆலோ­ச­னை­க­ளின் போது பகி­ரப்­பட்ட அனு­ப­வங்­க­ளின் அடிப்­ப­டை­யில் மத்­திய அரசு மிக விரை­வில் நோய்த்­தொற்­றுப் பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் குறித்து மேலும் சில அறி­வு­றுத்­தல்­களை வெளி­யி­டும் எனத் தெரி­கிறது.