டெல்லியில் 80க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் நிறுத்தம்

புது­டெல்லி: சில மாநி­லங்­கள் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­திய நிலை­யில் நேற்று இந்­தி­யா­வின் மத்­திய அரசு உள்­நாட்டு விமா­னப் போக்­கு­வ­ரத்­தைத் தொடங்க உத்­த­ர­விட்­டது. அதை­ய­டுத்து பல மாநி­லங்­களில் உள்­நாட்டு விமா­னச் சேவை தொடங்­கப்­பட்­டது. இருப்­பி­னும் பல நகர்­களில் விமா­னச் சேவை­களில் தடை ஏற்­பட்­டது. இந்­தி­யத் தலை­ந­கர் புது­டெல்­லி­யில் மட்­டும் 82 விமா­னச் சேவை­கள் நிறுத்­தப்­பட்­டன. அத­னால் பய­ணி­கள் செய்­வ­த­றி­யாது விமான நிலை­யத்­தில் தவிக்கும் நிலை ஏற்பட்டது. அதேபோல் மும்பை அனைத்­து­லக விமான நிலை­யத்­தி­லும் பல்­வேறு விமா­னங்­கள் ரத்து செய்­யப்­பட்­ட­தால் பயணி­கள் விமான நிலை­யத்­தில் காத்­துக்­கி­டந்­த­னர்.

மும்பை விமான நிலை­யத்­திற்கு வெளியே காத்­தி­ருந்த பெண் விமானி ஒரு­வர் கூறு­கை­யில் ‘‘நாங்­கள் டெல்­லிக்கு செல்­வ­தற்கு வந்­தி­ருந்­தோம். நாங்­கள் இங்கு வந்­த­போது விமா­னச் சேவை நிறுத்தப்பட்டதாக தெரி­வித்­தார்­கள். விமான ஊழி­யர் ஒரு­வர் எங்­க­ளி­டம் வந்து, ஒரு­வேளை இன்று இரவு விமா­னம் இயக்­கப்­ப­ட­லாம் என்­றார். ஆனால் அதுவும் உறுதி செய்­யப்­ப­ட­வில்லை’’ என்­றார்.

கிரு­மித்­தொற்று அச்­சம் குறை­யாத நிலை­யில் விமா­னப் போக்­கு­வ­ரத்தை மேலும் சில நாட்க­ளுக்கு நிறுத்தி வைக்க வேண்­டும் என மகா­ராஷ்­டிரா, மேற்­கு­வங்­கம், தமி­ழ­கம் உள்ளிட்ட மாநி­லங்­கள் வலி­யு­றுத்­தின. நீண்ட பேச்­சு­வார்த்தைக்குப் பின்னர் அந்த மாநிலங்கள் சில விதி­மு­றை­க­ளு­டன் விமா­னச் சேவைகளுக்கு ஒப்­புக்கொண்­டன. மகா­ராஷ்­டி­ரா நாள்தோ­றும் 25 விமா­னச் சேவை­க­ளுக்கு மட்­டுமே ஒப்­புக்­கொண்­டது. அதே­போல் ஹைத­ரா­பாத்­ 30, கோல்­கத்­தா­20 விமா­னச் சேவைகளுக்குச் சம்மதித்தன.

இந்நிலையில் நேற்று ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட விமா­னங்­கள் இயக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்ட நிலை­யில், சில நிறு­வ­னங்­கள் பல்­வேறு கார­ணங்­க­ளால் விமா­னச் சேவை வழங்குவதில் இருந்து பின்வாங்கிக்கொண்டன.

மாநில அர­சு­கள் பல­வும் தங்­கள் மாநி­லத்­துக்கு வந்து சேரும் விமா­னப் பய­ணி­க­ளுக்கு என வெவ்­வேறு வகை­யான விதி­மு­றை­களை வகுத்­துள்­ளன. தனி­மைப்­ப­டுத்­து­தல், அதற்­கான செலவு, நோய்த்­தொற்று இருப்­பின் அதற்­கான சிகிச்சை முறை, கட்டுப்பாடுகள் ஆகி­யவை மாநி­லந்­தோ­றும் மாறு­ப­டு­கின்­றன. எனவே பய­ணி­கள் இது­போன்ற விவ­ரங்­களை தெரிந்துகொண்டு பய­ணங்­களை மேற்­கொள்ள வேண்­டும் என இந்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைச்சு அறி­வு­றுத்தி உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!