சுடச் சுடச் செய்திகள்

24 மணி நேரத்தில் 6,535 பேருக்கு கிருமித் தொற்று; 146 பேர் பலி 1.45 லட்சம் மக்கள் பாதிப்பு

புது­டெல்லி: இந்­திய நாடெங்­கும் உயிர்க்­கொல்­லி­யான கொேரானா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 1,45,380ஆக அதி­க­ரித்­துள்­ளது. கடந்த 24 மணி நேரத்­தில் மட்­டும் இந்­தக் கிரு­மித் தொற்­றால் 6,535 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் 146 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­க­வும் மத்­திய சுகா­தார அமைச்சு தக­வல் வெளி­யிட்­டுள்­ளது.

கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள இந்த 1.45 லட்­சம் மக்­களில் பாதிக்கும் அதி­க­மா­னோர் நான்கு மாநி­லங்­களில் மட்­டுமே உள்­ள­தாக வும் அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

மகா­ராஷ்­டி­ரத்­தில் 52,667 பேரும் தமிழ்­நாட்­டில் 17,082 பேரும் குஜ­ராத்­தில் 14,460 பேரும் டெல்­லி­யில் 14,053 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­வித்துள்­ளன.

இது­கு­றித்து மத்­திய சுகா­தார அமைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், “இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்டு உள்ளவர்களின் எண்­ணிக்கை 1,45,380ஆக உயர்ந்­துள்ளது. அத்­து­டன் இக்­கி­ரு­மி­யால் பலி­யா­னோ­ரின் எண்­ணிக்கையும் 4,167ஆக அதிகரித்துள்­ளது.

“அதே­வேளையில் கிருமி பாதிப்­பில் இருந்து 60,490 பேர் குண­ம் ­அடைந்­துள்­ள­னர். இக்கிருமி பாதிப்­பால் 80,722 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்றனர்.

“இந்­தி­யா­வில் அதி­க­பட்­ச­மாக மகா­ராஷ்­டி­ரத்­தில் 52,667 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இது­வரை அங்கு 1,695 பேர் பலி­யா­கி­யுள்ள நிலை­யில் 15,786 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர்,” என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கர்நாடகத்தில் புதிதாக 100 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 2,282 ஆகவும் ராஜஸ்தானில் மேலும் 176 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதற்­கி­டையே, வெளி­நா­டு­களில் சிக்­கித் தவித்து வரும் இந்­திய நாட்­டி­னரைத் தாய­கத்­திற்கு அழைத்து வரு­வ­தற்­காக மத்­திய அரசு ‘வந்தே பாரத் மிஷன்’ என்ற திட்­டத்தை அண்மையில் தொடங்கி யது. இந்த திட்­டத்­தின்­ இரண்டாம் கட்டமாக வளை­குடா நாடு­களில் இருந்து சுமார் 140 விமா­னங்­களில் 23,000க்கும் அதி­க­மான மக்­கள் இந்­தி­யா­வுக்­குத் திரும்ப உள்­ள­னர்.

இந்­நி­லை­யில் அமெ­ரிக்­கா­வில் சிக்­கித் தவித்து வந்த 300க்கும் மேலான இந்­தி­யர்­கள் நியூ­யார்க்­கில் இருந்து சிறப்பு ஏர் இந்­தியா விமா­னத்­தில் நேற்று இந்­தியா திரும்­பி­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon