அமெரிக்காவில் மலிவு விலை வென்டிலேட்டரை உருவாக்கிய இந்தியத் தம்பதி

உலக அளவில் 5.6 மில்லியனுக்கு மேற்பட்டோரைத் தாக்கியுள்ள கொரோனா கிருமித்தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 350,000ஐ கடந்துள்ளது.

கொரோனா கிருமியால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் எழுகிறது. அது மரணத்துக்குக்கூட இட்டுச் செல்லக்கூடும்.

அத்தகைய பாதிப்புடையவர்களுக்கு ‘வென்டிலேட்டர்’ எனப்படும் செயற்கை சுவாசக் கருவிகளின் விலை அதிகமாக இருப்பதுடன், அதன் விலையும் அதிகமாக உள்ளது.

இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு தம்பதியர் மலிவு விலை செயற்கை சுவாசக் கருவியை உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

பேராசிரியர் தேவேஷ் ரஞ்சன், குமுதா தம்பதி, உருவாக்கியுள்ள வென்டிலேட்டரின் விலை, தற்போது பயன்பாட்டில் உள்ள கருவிகளின் விலையைவிட 10 மடங்குவரை குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்தின் ஜார்ஜ் உட்ரப் இயந்திரப் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் தேவேஷ் ரஞ்சன். அவரது மனைவி குமுதா, அட்லாண்டா நகரில் மருத்துவராகப் பணிபுரிகிறார் இருக்கிறார்.

இவர்கள் இருவரும் இணைந்து மூன்று வார காலத்தில் மலிவு விலை வெண்டிலேட்டரை உருவாக்கி இருக்கிறார்கள்.

தாங்கள் தயாரித்திருக்கும் வென்டிலேட்டர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் பயன்படுத்தப்படக்கூடியதல்ல என்று குறிப்பிடும் இத்தம்பதி, கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் பிரச்சினைகளிலிருந்து விடுபடப் போதிய உதவி வழங்குவதாக இருக்கும் என்கின்றனர்.

பேராசிரியர் தேவேஷ் ரஞ்சன், பீகார் தலைநகர் பாட்னாவில் பிறந்து வளர்ந்தவர். தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள ஆர்இசி பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். அதன்பின்னர் அமெரிக்காவில் விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார். ஜார்ஜியா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் 6 ஆண்டுகளாக கற்பித்து வருகிறார்.

மருத்துவர் குமுதா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர். 6 வயதாக இருந்தபோதே தனது பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறியவர் அவர். மருத்துவ படிப்பை நியுஜெர்சியில் முடித்தார்.

“இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் தேவையை கருத்தில் கொண்டுதான் இந்தக் கருவியை உருவாக்கி உள்ளோம். இந்தியாவில் கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களை பயன்படுத்தியே இந்த வெண்டிலேட்டரை எளிதாக தயாரிக்க முடியும்,” என்கிறார்கள் இந்தத் தம்பதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!