சுடச் சுடச் செய்திகள்

மகாரா‌ஷ்டிராவில் வேலை பார்க்க உ.பி. மாநிலத்தவர் பதிவுசெய்ய வேண்டும்

மும்பை: மற்ற மாநி­லங்­க­ளுக்கு உத்­த­ரப் பிர­தேச தொழி­லா­ளர்­கள் தேவைப்­பட்­டால் அந்த மாநி­லங்­கள் எங்­க­ளி­டம் அனு­மதி பெற வேண்­டும் என்று அண்­மை­யில் உ.பி. முத­ல­மைச்­சர் யோகி ஆதித்­ய­நாத் கூறி­யி­ருந்­தார். அதற்குப் பதி­லடி தரும் வகை­யில் மகா­ரா­‌ஷ்­டிர மாநி­லத்­தின் முதல்­வர் உத்­தவ் தாக்­கரே புதிய உத்­த­ரவு ஒன்­றைப் பிறப்­பித்­துள்­ளார்.

“உத்­த­ரப் பிர­தேச தொழி­லா­ளர்­க­ளைப் பணிக்கு அமர்த்த உ.பி. அர­சி­டம் அனு­மதி பெற­வேண்­டும் என யோகி ஆதித்­ய­நாத் கூறினார். அதே­போல் இங்கு வேலை செய்ய வரும் அம்­மா­நி­லத் தொழி­லா­ளர்­களும் மகா­ரா­‌ஷ்­டிர அர­சின் அனு­ம­தி­யைப் பெற வேண்­டும். இங்கு வேலைக்கு வர­விருப்­ப­வர்­கள் மகா­ரா­‌ஷ்­டிர அர­சி­ட­மும் காவல்­து­றை­யி­டம் பதி­வு­செய்ய வேண்­டும்,” என்று முதல்­வர் உத்­தவ் தாக்­கரே கூறி­யுள்­ளார். இந்­நி­லை­யில் புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­க­ளுக்கு மத்­திய, மாநில அர­சு­கள் போது­மான உத­வி­க­ளைச் செய்­ய­வில்லை என உச்­ச­நீ­தி­மன்­றம் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon