டெல்லியில் 18 ஆண்டு காணாத வெப்பம்

டெல்லியில் 18 ஆண்டு காணாத வெப்பம்

1 mins read
8037cc18-cd56-4a3e-9e28-bdeb67f5a78f
டெல்லியில் 18 ஆண்டு காணாத வெப்பம் நேற்று முன்தினம் பதிவானது. யமுனை ஆற்றங்கரைக் காற்றில் வெப்பத்தைத் தணித்துக்கொண்டு ஆற்றில் மீன் பிடிக்கின்றனர் இவர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 18 ஆண்டு காணாத அதிக வெப்பம் நேற்று முன்தினம் பதிவானது. கடந்த 2002ஆம் ஆண்டு மே மாதம் 46 டிகிரி செல்சியஸ் பதிவானதே டெல்லியின் உச்சகட்ட வெப்ப அளவாக இருந்தது. அதற்குப் பிறகு செவ்வாய்க்கிழமைதான் அதே 46 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அத்துடன் இந்தியா முழுவதும் அன்று பதிவான வெப்பநிலையின் அடிப்படையில் டெல்லி இரண்டாவது இடத்தில் இருந்தது.