சுடச் சுடச் செய்திகள்

வெட்டுக்கிளிகளை அழிக்க பூச்சிக்கொல்லி தெளிப்பு

ஜெய்ப்­பூர்: ராஜஸ்­தா­னில் பயிர் களை நாசம் செய்­யும் வெட்­டுக்­கிளி­களைத் துடைத்­தொ­ழிக்க ஆளில்லா விமா­னங்களை இம்­மாநில வேளாண்­மைத் துறை பயன்­ப­டுத்தி வரு­கிறது.

அங்­குள்ள சோமு மாவட்­டத்­தின் சமோத் பகு­தி­யில் நேற்று முதன் முத­லாக இந்த ஆளில்லா விமா­னங்கள் மூலம் பூச்­சிக்­கொல்லி மருந்­து­கள் தெளிக்­கப்­பட்­டன.

மத்­திய வேளாண் அமைச்­ச­கம் வழங்­கி­யுள்ள முதல் தொகுதி ஆளில்லா விமா­னங்கள் மாநில வேளாண்­மைத் துறை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன.

ஜெய்ப்­பூ­ரின் சோமு தெஹ்­ஸில் உள்ள சமோத் கிரா­மத்­தில் புதன் கிழமை காலை இந்த விமா­னத்­தின் செயல்­பாடுகள் தொடங்­கின.

இந்த ஆளில்லா விமா­னங்­கள் 10 லிட்­டர் ரசா­ய­னங்­க­ளைத் தெளிப்­ப­தற்­காக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன. அதோடு பயங்­கர சத்­தம் எழுப்பி வெட்­டுக்கிளி­களை வெவ்­வேறு பகுதிகளுக்கும் சித­ற­டிக்கச் செய் யும் சக்தி கொண்­டவை என்­றும் கூறப்­ப­டு­கிறது.

இது­கு­றித்து மாநில வேளாண் மைத்­துறை ஆணை­யர் ஓம் பிர காஷ் கூறு­கை­யில், “வெட்­டுக்­கிளி களை அழிக்க வாடகை ஆளில்லா விமா­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் நிலை­யில், அவற்­றின் எண்­ணிக் கையை அதி­க­ரிப்­போம்.

“வாக­னங்­கள் செல்­ல­மு­டி­யாத பகு­தி­கள், கரடுமுர­டான பாதை­கள், உய­ர­மான பகு­தி­களில் இந்த ஆளில்லா விமா­னங்­கள் சிறந்த பல­ன­ளிக்­கும். ஒரு ஆளில்லா விமா­னம் 15 நிமி­டத்­தில் கிட்­டத்­தட்ட 2.5 ஏக்­கர் பரப்­ப­ள­வில் பூச்­சிக்­கொல்­லியை தெளித்­து­வி­டும்,” என்று தெரிவித்தார்.

வெட்­டுக்­கி­ளி­களை அழிக்­கும் நோக்­கத்­திற்­காக மேலும் 30 ஆளில்லா விமா­னங்­களை விரை­வில் பயன்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­க­விவ­சா­யத் துறை அதி­காரி ஒரு­வர் கூறி­யுள்­ளார்.

ராஜஸ்­தா­னில் முதல்­வர் அசோக் கெலாட் தலை­மை­யில் காங்­கி­ரஸ் ஆட்சி நடந்து வரு­கிறது. இங்குள்ள பாதிக்­கும் மேற்­பட்ட மாவட்­டங்­களில் வெட்­டுக்­கி­ளி­கள் கூட்­டம் கூட்­ட­மாகப் படை­யெ­டுத்­துள்­ளன. இதனால் பயிர்­கள் நாசமடை­வ­தால் விவ­சா­யி­கள் கவலை அடைந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், ராஜஸ்­தா­னில் இருந்து மத்தியப்பிரதேசம், மகாராஷ்­டிரம், சத்­தீஸ்­கர் மாநி­லங்­க­ளுக்கும் ஓரிரு நாட்­களில் இந்த வெட்டுக்கிளி கள் படையெடுக்க வாய்ப்­புள்­ளதால் இம்­மா­நி­லங்­க­ளின் விவ­சா­யி­களும் அதி­கா­ரி­களும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும்­படி அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon