சுடச் சுடச் செய்திகள்

10 ஊழியர்களை விமானத்தில் அனுப்பிைவத்த விவசாயி

புதுடெல்லி: தன்னிடம் வேலை பார்த்து வந்த 10 வெளிமாநிலத் தொழிலாளர்களை விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து அவர்களது சொந்த மாநிலமான பீகாருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்து உள்ளார் டெல்லி விவசாயி ஒருவர்.

தங்களது பயணம் பற்றி தொழி லாளர்கள் கூறுகையில், “இந்தச் சம்பவத்தை எங்களால் நம்பவே முடியவில்லை. நாங்கள் மற்றவர்கள் போல் நடந்தோ, மிதிவண்டியிலோ, ரயிலிலோ, பேருந்திலோ அல்ல; விமானத்தில் எங்கள் மாநிலத்துக்கு திரும்பிச் செல்வதை நிைனத்தால் ஆச்சரியமாக உள்ளது. நாங்கள் கனவில்கூட இதை நினைத்துப் பார்த்ததில்லை. எங்கள் முதலாளி தங்க முதலாளி,” என்று பாராட்டு பத்திரம் வாசித்துள்ளனர்.

டெல்லியின் திகிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பப்பன் கெஹ் லோட். இவர் காளான் சாகுபடி செய்து வருகிறார்.

ஊரடங்கு உத்தரவை அடுத்து அனைத்து தொழிலாளர்களையும் கெஹ்லோட் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதுபற்றி அவரது சகோதரர் நிரஞ்சன் கூறுகையில், “எங்களுடன் 20 ஆண்டுகாலம் பணியாற்றியவர் கள். இவர்களது பாதுகாப்பு முக்கி யம் என்று தோன்றியதால் விமா னத்தில் செல்ல டிக்கெட் எடுத்துக் கொடுத்தோம். அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்து அனுப்பி வைத்துள்ளோம்,” என்றார்.

நேற்று காலை இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து பாட்னா செல்லும் விமா னத்தில் தொழிலாளர்கள் அனை வரும் புறப்பட்டுச் சென்றனர்.

முதலாளி கெஹ்லோட் ரூ.68,000 செலவிட்டு விமான டிக்கெட் எடுத்ததோடு, தொழிலாளர்களின் கையில் தலா ரூ.3,000 அளித்து அவர்களை தங்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தார். விமானநிலையத்தில் பயணப்பட நிற்கும் ஊழியர்கள். படம்: ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon