கொரோனா: இந்தியாவின் 13 நகரங்களில் கடும் கட்டுப்பாடுகள் தொடரும்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று நாள்­தோ­றும் கிடு­கி­டு­வென கூடி வரு­கிறது. அந்த நாட்­டில் 13 நக­ரங்­கள் படு­மோ­ச­மா­கப் பாதிக்­கப்­பட்டு இருக்­கின்­றன என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அந்த நகர்­களில் மே மாதம் 31ஆம் தேதிக்­குப் பிற­கும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட வட்­டா­ரங்­களில் இருப்­ப­தைப் போன்ற கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் தொடர்ந்து நடப்­பில் இருந்து வரும் என்றும் ஊடகத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

மும்பை, சென்னை, டெல்லி, அக­ம­தா­பாத், தானே, புனே, ஹைதரா­பாத், கோல்­கத்தா, இந்தூர், ஜெய்ப்­பூர், ஜோத்­பூர், செங்­கல்­பட்டு, திரு­வள்­ளூர் ஆகி­யவை அந்த நகர் பகு­திகள் என்று மத்­திய அர­சாங்­கம் அறிவித்து இருக்­கிறது.

இந்த நிலை­யில், மாநில முதல்­வர்­கள், யூனி­யன் பிர­தேச பிர­மு­கர்­க­ளு­டன் அமைச்­ச­ர­வைச் செய­லா­ளர் ராஜுவ் காபா ஆலோ­சனை கூட்­டம் நடத்­தி­னார். அந்­தக் கூட்­டத்­தில் அந்த 13 நகர்­க­ளின் நிர்­வா­கி­களும் கலந்­து­கொண்­டார்­கள்.

அந்த நக­ரங்­களில் மே 31க்குப் பிற­கும் கடு­மை­யான கட்­டுப்­பாடுகள் தொட­ரும் என்று தெரி­வ­தாக ஹிந்­துஸ்­தான் டைம்ஸ் செய்­தித்­தாள் தெரி­வித்து உள்­ளது.

இந்­தி­யா­வில் கொவிட்-19 கிருமி தொற்றி இருப்­போ­ரில் சுமார் 70 விழுக்­காட்­டி­னர் அந்த நக­ரங்­க­ளில்­தான் இருக்­கி­றார்­கள்.

இத­னி­டையே, இந்­தி­யா­வில் நேற்­றுக் காலை 8 மணி நில­வ­ரப்­படி மொத்­தம் 165,799 பேரைக் கிருமி தொற்றி இருந்­தது. வியாழக்­கி­ழமை மட்­டும் புதி­தாக 7,466 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர்.

ஒரே நாளில் 175 பேர் மாண்­ட­தால் மர­ண­ம­டைந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 4,706 ஆகக் கூடி­யது. மொத்­தம் 71,106 பேர் குண­ம­டைந்து இருக்­கி­றார்­கள். உல­க­ள­வில் கிருமி அதி­கம் பாதித்­துள்ள நாடு­க­ளின் பட்­டி­ய­லில் ஒன்­ப­தா­வது இடத்­தில் இந்­தியா இப்போது உள்­ளது.

கிரு­மித்­தொற்­றுக்குச் சீனா­வை­விட இந்­தி­யா­வில் அதி­கம் பேர் பலி­யா­கி­விட்­டார்­கள் என்று உல­கத் தக­வல்­கள் கூறு­கின்­றன.

இவ்­வே­ளை­யில், நாட்­டில் ஜூலை மாதம் நாள் ஒன்­றுக்கு சுமார் 5 லட்­சம் பேர் கொரோனா கிரு­மித்­தொற்று பரி­சோ­த­னைக்கு உட்­படுத்­தப்­ப­டு­வார்­கள் என்று மத்­திய அரசு தெரி­வித்து இருக்­கிறது.

இப்­போது நாள் ஒன்­றுக்கு சுமார் 1 லட்­சம் பேர் பரி­சோ­திக்­கப்­படுவதாக­ கொவிட்-19 தேசிய சிறப்புப் பணிக்­கு­ழுத் தலை­வர் டாக்­டர் வி கே பால் தெரி­வித்­தார்.

ஆனால் அத்­த­கைய சோத­னைகள் பற்­றிய மேல் விவ­ரங்­களை அவர் குறிப்­பி­ட­வில்லை.

ஒரு மாநி­லத்­தில் இருந்து மற்­றொரு மாநி­லத்­துக்கு தொழி­லா­ளர்­கள் உள்­ளிட்ட பல­ரும் கண்­ட­படி சென்று வரு­வ­தால் கிருமிப் பர­வல் கூடு­கிறது.

இதன்­ கா­ர­ண­மாக அத்­த­கைய தொழி­லா­ளர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப் படு­கி­றார்­கள்.

அதே­போல வெளி­நா­டு­களில் இருந்து அழைத்து வரப்­படும் இந்­தி­யர்­களும் தனி இடத்­தில் வைக்­கப்­பட்டு கண்­கா­ணிக்­கப்­ப­டு­கி­றார்­கள். இம்­மா­தம் 26ஆம் தேதி நில­வரப்­படி இந்­தியா முழு­வ­தும் மொத்­தம் 23 லட்­சம் பேர் தனி­மைப் படுத்­தப்­பட்டு இருப்­ப­தாக மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறினார்.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வில் கொரோனா தொற்று கார­ண­மாக பிறப்­பிக்­கப்­பட்டு இருக்­கும் ஊர­டங்­கின் கார­ண­மாக மொத்­தம் 1.20 கோடி பேர் மிக­வும் ஏழ்மை நிலைக்­குத் தள்­ளப்­பட்டு இருக்­கி­றார்­கள் என்று அனைத்­து­லக ஆய்வு ஒன்று கூறு­கிறது.

ஊர­டங்கு கார­ண­மாக வரு­மான இடை­வெளி கூடும் என்­றும் ஏழ்மை இன்னும் அதிகரிக்கும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!