கிருமித்தொற்று: நாடாளுமன்ற கட்டடத்தில் இரண்டு மாடிகள் மூடல்

புது­டெல்லி: புது­டெல்­லி­யில் நாடாளு­மன்ற வளாக அலு­வ­ல­கத்­தில் பணி­பு­ரி­யும் ஓர் அதி­கா­ரிக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இதை அடுத்து நாடா­ளு­மன்ற வளா­கம் அருகே உள்ள இணைப்புக் கட்­ட­டத்­தின் 2 மாடி­கள் மூடப்­பட்­டு­விட்­டன.

நாடா­ளு­மன்ற மேல­வை­யின் செய­ல­கத்­தில் அந்த அதி­காரி வேலை பார்த்து வந்­தார். அவ­ருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டதை அடுத்து அவ­ரு­டைய மனை­விக்கும் பிள்­ளை­க­ளுக்­கும் தொற்று ஏற்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. அந்த அதி­காரி பணி­யாற்றி வந்த அலு­வ­ல­கம் மூடப்­பட்­டது.

முற்­றி­லும் மருந்­த­டித்­துச் சுத்­தப்­ப­டுத்­தப்­பட்­டது. மிக­வும் எச்சரிக்­கை­யு­டன் உடல்­நி­லை­யைக் கவ­னித்­துக் கொள்­ளு­மாறு அந்த அதி­கா­ரி­யு­டன் தொடர்­பில் இருந்த அனை­வ­ரும் கேட்­டுக்­கொள்­ளப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

நாடா­ளு­மன்­றத்­தில் ஊட­கச் செய்தி மற்­றும் மொழி­பெ­யர்ப்­புத் துறை­யில் பணி­யாற்றி வந்த மூத்த அதி­காரி ஒரு­வ­ருக்குச் சுமார் ஒரு வாரத்­துக்கு முன் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

இந்த அதி­காரி மே 12ஆம் தேதி முதல் வேலை பார்த்­தார். இவரின் அலு­வ­ல­கம் நாடாளு­மன்ற இணைப்­புக் கட்­ட­டத்­தின் ஐந்­தா­வது மாடி­யில் இருக்­கிறது.

இதற்கு முன்­ன­தாக ஏப்­ரல் மாதம் நாடா­ளு­மன்ற ஊழி­யர் ஒரு­வ­ருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு இருந்­தது. மொத்தம் நாடாளுமன்ற ஊழியர்கள் நால்வரைக் கிருமி தொற்றி உள்ளதாகத் தெரிகிறது.

நாடா­ளு­மன்ற மக்­க­ள­வைச் செய­ல­கத்­தில் 3,000 பேருக்­கும் அதிக ஊழி­யர்­கள் வேலை பார்க்­கி­றார்­கள். இந்­தக் கட்­ட­டத்­திற்­குச் சுமார் 100 மீட்­டர் தொலை­வில் இணைப்­புக் கட்­ட­டம் இருக்­கிறது.

நாடாளுமன்றம் மே மாதம் 3ஆம் தேதி முதல் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படுகிறது.