பிரதமர் மோடி- அமித் ஷா ஆலோசனை

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமிப் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள 4ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிகிறது.

நான்காவது ஊரடங்கு காலகட்டத்தில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு நிறுவனங்களும் உள்நாட்டு விமானச் சேவை, ரயில் சேவையும் மீண்டும் தொடங்கி உள்ளன.

ஆனாலும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையவில்லை.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். மே 31க்குப் பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இருவரும் விவாதித்ததாகத் தகவல்கள் குறிப்பிட்டன.