மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு: கட்டுப்பாடுகள் தளர்வே காரணம்

மும்பை: இந்­தி­யா­வி­லேயே கொரோனா தொற்று மகா­ராஷ்­டி­ரா­வில்­தான் அதி­க­மா­கக் கூடி வரு­கிறது. அங்கு நேற்­றுக் காலை 8 மணி நில­வ­ரப்­படி ஏறக்­கு­றைய 60,000 பேர் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளாகி இருந்­த­னர்.

அந்த மாநி­லத்­தில் மொத்­தம் 1,982 பேர் கொவிட்-19 கிரு­மிக்­குப் பலி­யாகி இருக்­கி­றார்­கள். 18,616 பேர் குண­ம­டைந்து இருக்­கி­றார்­கள். இது­வ­ரை­யில் 419,417 பேர் சோதிக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

மகா­ராஷ்­டி­ரா­வில் கடந்த ஒரு வார­மாக நாள்­தோ­றும் 2,000க்கும் மேற்­பட்­டோர் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். உல­கின் மிகப்­பெ­ரிய குடி­சைப் பகு­தி­யான மும்பை தாராவி­யி­லும் கொரோனா தொற்று அதி­க­ரித்து வரு­கிறது.

தாரா­வி­யில் பாதிப்பு அடைந்­தோர் எண்­ணிக்கை சுமார் 1,700 ஆக அதி­க­ரித்­துள்­ளது. பலி­யா­னோர் எண்­ணிக்கை ஏறக்குறைய 65 ஆக உயர்ந்­துள்­ளது.

இத­னி­டையே, அந்த மாநி­லத்­தில் தொற்று அதி­கம் பர­வு­வ­தற்கு கட்­டுப்­பா­டு­கள் அகற்­றப்­பட்­டதே கார­ண­மாக இருக்­கக்­கூ­டும் என்று சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் கூறு­கி­றார்­கள்.

மகாராஷ்டிராவில் கிருமித் தொற்று அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் இருந்து மக்கள் இதர மாவட்டங்களுக்கு செல்கிறார்கள் என்றும் இதன் காரணமாகவே தொற்று கூடுகிறது என்றும் மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப்பி கூறினார்.

இந்த எண்­ணிக்கை வரும் நாட்­களில் இன்­னும் கூடும் என்றும் தெரி­வித்த அவர், என்­றா­லும் கிரு­மித்­தொற்றை எப்­ப­டி­யும் சமா­ளித்­து­வி­ட­லாம் என்ற நம்­பிக்கை இருப்­ப­தா­க­வும் குறிப்பிட்டார்.

மகா­ராஷ்­டி­ரா­வி­லேயே மும்­பை­யில்­தான் தொற்­றும் மர­ண­மும் அதி­க­மாக இருக்­கிறது. அந்த மாநி­லத்­தில் இது­வ­ரை­யில் 25 போலிஸ்­கா­ரர்­கள் கொரோனா தொற்று கார­ண­மாக பலி­யா­கி­விட்­டார்­கள். மொத்­தம் 2,211 போலிஸ் அதி­கா­ரி­க­ளைக் கிருமி தொற்றி இருக்­கிறது.

இவ்­வே­ளை­யில், மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் விரை­வில் கட்­டுப்­பாடுகள் தளர்த்­தப்­படும் என்­றா­லும் தலை­ந­கர் மும்­பை­யில் கடும் கட்டுப்­பா­டு­கள் தொட­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

“மே 31க்குப் பிறகு மத்­திய அர­சாங்­கத்­தின் உத்­த­ர­வு­க­ளுக்கு ஏற்ப கொஞ்­சம் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­த­லாம் என்று கரு­து­கி­றோம்.

“கட்­டுப்­பா­டு­கள் நீட்­டிக்க வேண்­டும் என்று பிர­த­மர் விரும்­பி­னால் அதையே நாங்­களும் செய்ய வேண்­டி இருக்­கும்,” என்று மகா­ராஷ்­டி­ரா­வின் நீர்­வ­ளத் துறை அமைச்­சர் ஜெயந்த் பட்­டேல் கூறி­னார். மாநி­லத்­தில் கட்­டுப்­பா­டு­களைத் தளர்த்­து­வ­தில் முதல்­வர் உத்­தவ் தாக்­கரே மிக­வும் கவ­னத்­து­டனும் எச்சரிக்கையுடனும் செயல்­படு­வதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!