விமானிக்குத் தொற்று; மாஸ்கோ சென்ற விமானம் திரும்பியது

விமானிக்குத் தொற்று; மாஸ்கோ சென்ற விமானம் திரும்பியது

1 mins read
d29dd22c-0f85-43c4-ac89-52af501a6fa3
டெல்­லி­யில் இருந்து மாஸ்கோ புறப்­பட்­டுச் சென்ற ஏர் இந்­தியா விமா­னத்தின் விமானிகளில் ஒருவருக்கு கிருமி தொற்றியதால் அந்த விமானம் நேற்று பாதி­யிலேயே புது­டெல்­லிக்­குத் திரும்­பி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. கோப்புப்படம்: ஊடகம் -

புது­டெல்லி: டெல்­லி­யில் இருந்து மாஸ்கோ புறப்­பட்­டுச் சென்ற ஏர் இந்­தியா விமா­னம் நேற்று பாதி­யிலேயே புது­டெல்­லிக்­குத் திரும்­பி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்த விமா­னத்­தின் விமா­னி­களில் ஒரு­வ­ருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று இருந்­ததே இதற்­கான கார­ணம் என்று அதி­கா­ரி­கள் கூறி­ய­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­தன. மேல் விவ­ரங்­கள் கிடைக்­க­வில்லை.

இத­னி­டையே, மத்­தி­யப்­பி­ர­தேசத்­தில் கொரோனா தொற்று கார­ண­மாக அதி­கம் பாதிக்­கப்­பட்டு உள்ள இந்­தூர் நக­ரில் பொது­மக்­கள் வெளியே செல்­லும் போது கைக்­குட்­டை­கள், துண்­டு­களை முகக்­க­வ­சங்­க­ளா­கப் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என்று உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு இருந்­தது.

ஆனால் பொது­மக்­கள் அதற்கு எதிர்ப்பு தெரி­வித்­த­தால் அந்­தத் தடை அகற்­றப்­ப­டு­வ­தாகவும்­ மக்கள் துண்டு, கைக்­குட்­டை­கள் முத­லான பல வகை முகக்­க­வ­சங்­க­ளை­யும் இப்­போது பயன்­ப­டுத்­த­லாம் என்றும் தெரி­விக்­கப்­பட்டுள்ளது.