இரண்டு இந்திய வம்சாவளியினருக்கு 12 ஆண்டுகள் சிறை

இரண்டு இந்திய வம்சாவளியினருக்கு 12 ஆண்டுகள் சிறை

1 mins read

லண்­டன்: பிரிட்­ட­னில் வசிக்­கும் விஜய­கு­மார் கிருஷ்­ண­சாமி, 32, சந்தி­ர­சே­கர் நல்­லை­யன், 44, என்ற இந்­திய வம்­சா­வளி ஆட­வர்­க­ளுக்கு 12 ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்டு இருக்­கிறது.

இவர்­கள் இணை­யத்­தில் மோசடி கணக்­கு­க­ளைத் திறந்து உல­கம் முழு­வ­தும் மொத்­தம் 24 நிறு­வ­னங்களை ஏமாற்றி 2.4 மில்­லி­யன் பவுண்டு பணத்தை மோசடி செய்து இருக்­கி­றார்­கள் என்று விசாரணையில் கூறப்­ப­ட்டது.

அதோடு இதர வகை தில்­லு­முல்லு காரி­யங்­க­ளி­லும் கள்­ளப்­பண விவ­கா­ரங்­க­ளி­லும் இவர்­க­ளுக்­குத் தொடர்பு உண்டு என்றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.