‘பொருளியல் எழுச்சிக்கு இந்தியா எடுத்துக்காட்டாகும்’

புது­டெல்லி: கொரோனா கிரு­மித்­தொற்று முடி­வுக்கு வந்­த­தும் இந்­தியா காண­விருக்கும் பொரு­ளி­யல் எழுச்சி உல­கிற்கு ஓர் எடுத்­துக்­காட்­டா­கத் திக­ழும் என்று பிர­த­மர் நரேந்­திர மோடி இந்­திய மக்­க­ளுக்கு எழு­திய கடி­தத்­தில் தெரி­வித்தார்.

கிரு­மித்­தொற்­றைச் சமா­ளிக்க அர­சாங்கம் அறி­வித்துள்ள ரூ.20 லட்­சம் கோடி திட்­டம் நாட்டைச் சுய­சார்பு நிலைக்குக் கொண்டு செல்­லும் என்றார் அவர்.

அந்­தத் திட்­டம் கார­ண­மாக அனைத்து வகை மக்­க­ளுக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் ஏரா­ள­மான வாய்ப்­பு­கள் கிடைக்­கும் என்­றார் அவர். திரு மோடி இரண்­டா­வது முறை­யாக பிர­த­மர் பத­வியை ஏற்­று ஓராண்டு நிறை­வடைகிறது.

அதைக் குறிக்­கும் வகை­யில் அவர் மக்­க­ளுக்கு கடி­தம் எழு­தி­னார்.

கொரோனா கிரு­மித்­தொற்று இந்­தியா சுய­சார்பு நாடாக மேம்­ப­டு­வ­தற்­குத் தேவை­யான வாய்ப்பை ஏற்­ப­டுத்­தித் தந்­தி­ருப்­பதாக அவர் கூறி­னார்.

கடந்த ஓராண்­டில் தன்­னு­டைய அர­சாங்­கம் சாதித்­த­வற்றை அந்­தக் கடி­தத்­தில் பிர­த­மர் மோடி பட்­டி­ய­லிட்­டார். 9.5 கோடி விவ­சா­யி­க­ளின் வங்­கிக் கணக்­கில் ரூ. 72,000 கோடி போடப்­பட்டு இருக்­கிறது.

வர­லாற்­றி­லேயே முதன்­மு­றை­யாக 60 வய­துக்­குப் பிறகு விவ­சா­யி­கள், பண்­ணைத் தொழி­லா­ளி­கள் போன்ற உழைப்­பா­ளி­களுக்கு மாதா­மா­தம் ரூ. 3,000 ஓய்­வூ­தியம் கிடைக்க வழி செய்­யப்­பட்டு இருக்­கிறது என்­றெல்­லாம் பிர­த­மர் குறிப்பிட்டார்.

கொரோனா கிரு­மிக்கு எதி­ரான போரில் இந்­தியா வெற்­றிப்­பா­தை­யில் முன்­னேறி வரு­வ­தா­க­வும் திரு மோடி குறிப்­பிட்­டார்.

கிரு­மித்­தொற்­றைத் தவிர்க்க நடப்­பில் உள்ள முடக்­கம் கார­ண­மாக மக்­கள் அனை­வ­ரும் பெரிய துன்­பத்­துக்கு ஆளாகி வரு­வ­தா­க­வும் அவர்­க­ளின் துன்­பத்தை ஒழிக்க தாங்­கள் ஒற்­று­மை­யாக, தீர்­மா­னத்­து­டன் பணி­யாற்றி வரு­வ­தா­க­வும் பிர­த­மர் தன் கடி­தத்­தில் தெரி­வித்­தார்.

தாங்­கள் சந்­திக்­கும் சங்­க­டங்­கள் அனைத்­தும் பேர­ழி­வு­க­ளாக மாறா­மல் பார்த்­துக்­கொள்ள வேண்­டிய பொறுப்பு மக்­க­ளுக்கு இருக்­கிறது என்று வலி­யு­றுத்­திய அவர், இந்த நெருக்­க­டி­யி­லி­ருந்து மீண்­டு­வர வேண்­டும் என அனை­வ­ரும் உறு­தி­கொள்­ள­வேண்­டும் என்­றார்.

ஜம்மு காஷ்­மீ­ருக்குச் சிறப்பு அதி­கா­ரம் வழங்­கிய 370 பிரிவை நீக்­கி­யதால் நாட்டின் ஒற்றுமை, ஒரு­மைப்­பாட்­டு உணர்வு வெளிப்­ ப­ட்டதாகவும் அயோத்தி ராமர் கோயில் தீர்ப்பு நூற்­றாண்­டு­க்கா­லம் நீடித்து வந்த சிக்­கல்­க­ளுக்­குத் தீர்­வாக அமைந்­தது என்­றும் பிர­த­மர் கடி­தத்­தில் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!