சுடச் சுடச் செய்திகள்

வெளி மாநிலக் குடியேறிகளைப் புண்படுத்திய ரயில் அதிகாரி இடைநீக்கம்

சிறப்பு ரயிலின் பெட்டி ஒன்றுக்குள் அமர்ந்திருந்த வெளி மாநிலக் குடியேறிகள் மீது பிஸ்கெட்டுகளை  மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் வீசியதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு உத்தரப் பிரதேசத்தின் பிரோசபாத் நகரிலுள்ள ரயில் நிலையம் ஒன்றில் இந்தச் சம்பவம் நடந்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

ரயில் அதிகாரிகள் பயணிகளுக்கு பிஸ்கெட்டுப் பொட்டலங்களை வழங்கிக்கொண்டிருந்தபோது டி. கே .டிக்சிட் என்ற அந்த அதிகாரி, புண்படும் வார்த்தைகளால் வெளி மாநிலத்து பயணிகளைக் கேலி செய்ததாக அக்காணொளி காட்டுகிறது.

"இந்த ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனர்,' என்று இந்திய ரயில்வே அமைப்பு டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தேசியநிலை ஊரடங்களால் வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் வெளி மாநில ஊழியர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்காக இந்தச் சிறப்பு ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.