(காணொளி): வெளிமாநிலத் தொழிலாளிகளுக்கு 'ரொட்டி' தயாரிக்கும் 99 வயது பாட்டி

1 mins read
37d1d1c7-866f-47dd-8d40-646e5cdfb8c8
-

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெளிமாநிலத் தொழிலாளிகள் ஆதரவின்றித் தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு நல்லுள்ளங்கள் சிலர் உதவ முன்வருகின்றனர். இத்தகைய உதவியைச் செய்வதற்கு வயது தடையே இல்லை என நிரூபிக்கிறார் மும்பையைச் சேர்ந்த 99 வயது மாது.

வெளிமாநில ஊழியர்களுக்காக சப்ஜி ரொட்டிகளை உருட்டிப் பொட்டலமிடுவதைக் காட்டும் காணொளியை அவரது பேரன் டுவிட்டரில் பதிவேற்றம் செய்திருகிறார். இந்தக் காணொளி இதுவரை 366,600 முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. இவரது உதவியைப் பாராட்டி இணைய வாசிகள் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

துடிப்புடன் ஊஞ்சலாடி 'வைரல்' ஆன பாட்டி

இதற்கிடையே ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 76 வயது பாட்டியான ஜெயா என்பவர் தம் வீட்டின் முற்றத்திலுள்ள ஊஞ்சலில் துடிப்புடன் விளையாடுவதைக் காட்டும் காணொளியும் இணையத்தில் வேகமாக வலம் வருகிறது.

இளையர்களையும் பிள்ளைகளையும் விஞ்சி அவர் வேகமாக ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்ததைக் கண்ட இணையவாசிகள் தங்களது வியப்பை வெளிப்படுத்தினர்.