ஊரடங்கிலும் உணர்வுகளுக்கு உயிரூட்டும் சிறுவர்கள்

ஊரடங்கிலும் உணர்வுகளுக்கு உயிரூட்டும் சிறுவர்கள்

1 mins read
f26afbb9-abfe-406c-bcd4-35cb3c8d458a
-

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள், அங்கு நிலவும் தேசியநிலை ஊரடங்கை ஆக்ககரமாகப் பயன்படுத்தி அதனால் லாபத்தையும் ஈட்டுகின்றனர். 'தி ஸ்டிக்ஸ் காமிக்ஸ்' என்ற அந்த கோலிச்சித்திர புத்தகத்தை இவர்கள் இருவரும் கைப்பட எழுதி வரைந்துள்ளனர்.

இந்தப் புத்தகத்தைச் செய்து முடிக்க மொத்தம் ஐந்து வாரங்கள் ஆனதாக இஷான் பெஞ்சமின் பிச்சைமுத்து (13), யோகான் பெஞ்சமின் பிச்சைமுத்து (10) என்ற அந்த இரண்டு சகோதரர்கள் தெரிவித்தனர்.

இவர்களது புத்தகம் 'வாட்ஸ்ஆப்' வழியாக விற்கப்பட்டு வருகிறது.

ஸ்பைடர்மேன், டிங்கல் உள்ளிட்ட கேலிச்சித்திரங்களை விரும்பும் இந்தப் பிள்ளைகள், மேலும் பல ஓவிய நூல்களை உருவாக்க விரும்புகின்றனர்.