மகாரா‌ஷ்டிராவில் கிருமித்தொற்றுச் சம்பவம் 67,000ஐ தாண்டியது

மும்பை: கொரோனா கிருமித் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு நேற்று காலை வரையிலான நிலவரப்படி 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை ஒரே நாளில் மேலும் 99 பேர் உயிரிழந்ததை அடுத்து அங்கு பலியானோர் எண்ணிக்கை 2,197ஆக அதிகரித்துள்ளது.

மும்பையில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் 1,700க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 70 பேர் பலியாகிவிட்ட னர்.

வர்த்தக நகரமான மும்பையில் இருந்து லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்பி வருகின்றனர். சொந்த ஊருக்குச் செல்ல 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர்.

இவர்களில் 6.5 லட்சம் பேர் சிறப்பு ரயில்கள் மூலமாகவும் 2 லட்சம் பேர் பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலமாகவும் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளதாக மும்பை மாநகர காவல்துறை துணை ஆணையர் அசோக் திரனயா தெரிவித்துள்ளார்.

அவர்­களில் பெரும்­பா­லா­னோர் உத்­த­ரப்­ பி­ர­தே­சம், பீகாரைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

மும்­பை­யில் இருந்து வெளியேறிய தொழி­லா­ளர்­களில் சுமார் 60 ஆயிரம் பேர் தமி­ழர்­கள் என்று அங்­குள்ள தமிழ் அமைப்­பு­கள் கூறு­கின்­றன. தாரா­வி­யில் வசிக்­கும் 8 லட்­சம் பேரில் சரி­பாதி பேர் தமி­ழர்­கள் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

அவர்­களில் கணி­ச­மா­னோர் தமி­ழ­கத்­துக்­குத் திரும்பிவிட்டதால் அங்கு மக்­கள் நெருக்­கடி குறைந்­துள்­ள­து. மகா­ராஷ்­டி­ரா­வில் இது­வரை 28 ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மா­னோர் கொவிட்-19 நோயி­ல் இ­ருந்து குண­ம­டைந்­தி­ருப்­ப­தாக சுகா­தார அமைச்சு தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!