மரண எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது; ஊரடங்கு நீட்டிப்பு

1 mins read
e6ec9bca-2bd8-49ac-88c6-af0201e7ee6f
டெல்லியில் ஆடவர் ஒருவருக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது. படம்: தகவல் ஊடகம் -

புது­டெல்லி: நாட்­டின் பல்­வேறு பகுதி­க­ளி­லும் கொரோனா கிருமித் தொற்று பரவி வரும் நிலை­யில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் மொத்த எண்ணிக்கை 5 ஆயி­ரத்­தைக் கடந்­துள்­ளது.

சனிக்­கி­ழமை ஒரே நாளில் 193 பேர் உயி­ரி­ழந்­த­னர். அதே­வேளையில் சனிக்­கி­ழமை ஒரே நாளில் 11 ஆயி­ரம் பேர் கொவிட்-19 நோயி­லி­ருந்து முழு­மை­யாக குணமடைந்­துள்­ள­னர் என்று சுகாதார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைத் தடுக்க மத்­திய, மாநில அர­சு­கள் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றன. எனி­னும் தினந்­தோ­றும் நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்­க­ளுக்கு நோய்த்­தொற்று ஏற்பட்டு வரு­கிறது.

தற்­போது நாடு முழு­வ­தும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளின் எண்­ணிக்கை ஒரு லட்­சத்து 82 ஆயி­ரத்து 143ஆக அதி­க­ரித்­துள்­ளது. 5,164 பேர் பலியாகி உள்­ள­னர்.

சுமார் 90 ஆயி­ரம் பேர் மருத்துவ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர் என்­றும், இது­வரை சுமார் 87 ஆயி­ரம் பேர் குண­ம­டைந்­துள்­ள­னர் என்­றும் சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­துள்­ளது.

நாடு முழு­வ­தும் 5வது கட்­ட­மாக ஜூன் 30ஆம் தேதி வரை ஊர­டங்கு நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது. எனி­னும் பல்வேறு தளர்­வு­களை மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

சில மாநி­லங்­கள் கூடு­தல் தளர்­வு­களை அமல்­ப­டுத்­தி­யுள்ள நிலை­யில், சில மாநி­லங்­கள் ஜூன் 30ம் தேதி வரை எந்­த­வி­தத் தளர்­வும் இருக்­காது என்­றும் அறி­வித்­துள்ளன.