ஒருவழியாக சென்னையிலும் முடிதிருத்தகங்கள் திறப்பு

ஒருவழியாக சென்னையிலும் முடிதிருத்தகங்கள் திறப்பு

1 mins read
3ab61621-98f0-44f6-bf67-72ce13ef4452
ஊரடங்கு தளர்வை அடுத்து 69 நாட்களுக்குப் பிறகு சென்னையிலும் முடி திருத்தும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. படம்: ஊடகம் -

சென்னை: ஊரடங்கு தளர்வை அடுத்து 69 நாட்களுக்குப் பிறகு சென்னையிலும் முடி திருத்தும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகளில் சுத்தம், சுகாதாரம், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளதால் முடிதிருத்தும் கட்டணம் ரூ.20 முதல் ரூ.50 வரை உயர்த்தப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

ஊரடங்கு உத்தரவை அடுத்து முடி திருத்தகங்கள் மூடப்பட்டதால் இல்லத்தரசிகள் பலரும் தங்களது குடும்பத் தினருக்கு முடிவெட்டிவிட்டு இப்பிரச்சினையை சமாளித்து வந்தனர். இந்நிலையில் மூடப்பட்டுக் கிடந்த கடைகள் இப்ேபாது திறக்கப்பட்டுள்ளன.