இந்திய எல்லையில் 14 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படை

1 mins read
4c4fcb27-b705-4360-a674-f5656f817356
-

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு 14 பயங்காரவாதிகள் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

அவர்கள் அனைவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.

மே மாதம் 28ஆம் தேதியில் இருந்து அம்மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவுஷரா பிரிவில் உள்ள கட்டுப்பாட்டு எல்லை வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி இந்திய எல்லைக்குள் மறைந்துள்ளதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் படையினர் இறங்கினர்.