மோடி: பொருளாதாரத்தை மீட்போம்

மோடி: பொருளாதாரத்தை மீட்போம்

1 mins read
e887289b-2ad2-4db0-97c9-3e268d09b418
-

புது­டெல்லி: கொரோனா கிருமி அச்­சு­றுத்­தல் கார­ண­மாக இரண்டு மாதங்­க­ளுக்கு மேலாக ஊர­டங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­து. அதனால் நாட்­டின் பொரு­ளா­தா­ரம் முன்­பி­ருந்­த­தைக் காட்­டி­லும் கடு­மை­யான பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளது.

ஐந்­தாம் கட்ட ஊர­டங்­கில் பல்­வேறு தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்டு, பல்­வேறு நிபந்­த­னை­க­ளு­டன் தொழில் நிறு­வ­னங்­கள் இயங்­கத் தொடங்­கி­யுள்­ளன.

இந்­நி­லை­யில், இந்­திய தொழில் கூட்­ட­மைப்­பின் (சிஐஐ) ஆண்­டுக் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. இக்­கூட்­டத்­தில் பிர­த­மர் மோடி காணொளி வாயி­லாக கலந்­து­கொண்டு, 'மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு' என்ற தலைப்­பில் துவக்க உரை­யாற்­றி­னார். அவர் பேசி­ய­தா­வது:-

"கொரோனா பாதிப்­பில் இருந்து மக்­களைக் காக்க வேண்­டும். அதேவேளை­யில் பொரு­ளா­தா­ரத்­தை­யும் வலுப்­ப­டுத்த வேண்­டும். கொரோனா கிரு­மித்தொற்றை எதிர்த்­துப் போரா­டு­வ­தற்கு நாம் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டி­யி­ருக்­கும்.

"இந்த சூழ்­நி­லை­யில், 'வளர்ச்சி­யை மீண்­டும் பெறு­தல்' என்ற நட­வ­டிக்­கையை சிஐஐ தொடங்­கி­யுள்­ளது. இதற்­காக இந்­தி­யத் தொழில்­து­றை­யி­னர் அனை­வ­ருக்­கும் வாழ்த்­து­களை தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். நாட்டின் வளர்ச்­சியை விரை­வு­ப­டுத்­து­வ­தற்­கும், இந்­தி­யாவை சுய­சார்பு நாடாக வளர்ச்சி பெறச் செய்­வ­தற்­கும், 'நோக்­கம், உள்­ள­டக்­கம், முத­லீடு, உள்­கட்­ட­மைப்பு, புதுமை' ஆகிய அம்சங்கள் முக்­கி­ய­மா­னவை. இவற்றைக் கொண்டு கொரோனா கிரு­மித்­தொற்­றால் வீழ்ச்சி கண்­டுள்ள பொரு­ளா­தா­ரத்தை விரை­வில் மீட்­போம். தொழில்­நுட்­பத்­தால் பொரு­ளா­தா­ரம் விரை­வில் மீளும். கொரோனா அச்­சு­றுத்­த­லுக்கு மத்­தி­யி­லும் பொரு­ளா­தா­ரம் வளர்ச்­சிப் பாதை­யில் செல்கிறது. பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்­து­வது நமது முன்­னு­ரி­மை­களில் ஒன்று. இதற்­காக அர­சாங்­கம் அதி­ரடி முடி­வு­களை எடுத்­துள்­ளது," என அவர் பேசி­னார்.