இறந்துகிடந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தைக்கு ‌ஷாருக்கான் உதவிக்கரம்

மும்பை: பீகா­ரில் முசா­பர்­பூர் ரயில்­நி­லைய நடை­மே­டை­யில் இறந்­து­கி­டந்த தனது தாயை எழுப்ப முய­லும் குழந்தை தொடர்­பான காணொளி கடந்த வாரம் சமூக ஊட­கங்­களில் பர­வி­யது. இதைப்­பார்த்த நடி­கர் ஷாருக்­கான் அந்த குழந்­தைக்கு ஆத­ர­வுக் கரம் நீட்­டி­யுள்­ளார்.

கொரோனா கிரு­மித்தொற்று பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் இந்­தி­யா­வின் அனைத்து மாநி­லங்­க­ளி­லும் ஊர­டங்கு அமல்­படுத்­தப்­பட்­டது. அத­னால் தொழிற்­சா­லை­கள், வர்த்­தக நிறு­வ­னங்­களில் பணி­பு­ரிந்து வந்த புலம்­பெயர் தொழி­லா­ளர்­கள் தங்­கள் சொந்த மாநி­லங்­க­ளுக்­குத் திரும்­பி­னர்.

புலம்­பெ­யர்ந்த தொழி­லா­ளர்­கள் கால்­ந­டை­யா­க­வும், ரயில்­க­ளி­லும், சைக்­கி­ளி­லும் சொந்த ஊர்­க­ளுக்­குத் திரும்­பி­னர்.

அவ்­வ­கை­யில் தன் ஒன்­றரை வய­துக் குழந்­தை­யு­டன் சொந்த ஊருக்­குக் கிளம்­பிய பெண் ஒரு­வர் பீகார் மாநி­லத்­தின் முசா­பர்­பூர் ரயில்­நி­லைய நடை­மே­டை­யில் இறந்­து­கி­டந்­தார்.

அவ­ரின் ஒன்­றரை வய­துக்­குழந்தை, தனது தாய் இறந்­த­து­கூ­டத் தெரி­யா­மல் தாயின் போர்­வையை விலக்­கிப் பார்த்து எழுப்ப முயல்­வ­தும், அந்­தப்­போர்­வைக்­குள் செல்­வது­மாக இருந்­தது. அதன்­பின் விசா­ரிக்­கை­யில் அந்த பெண் இறந்­தது தெரி­ய­வந்­தது.

இந்தக் காணொளி கடந்த வாரம் சமூக வலைத்­த­ளங்­களில் பர­வி­யது. தாயின் மர­ணத்­தைக்­கூட அறி­ய­மு­டி­யாத நிலை­யில் குழந்தை இருப்­ப­தைப் பார்த்து மக்­கள் வேதனை அடைந்­த­னர்.

இந்­தக் காட்­சிை­யப் பார்த்த இந்தி நடி­கர் ஷாருக்­கான் அந்­தக் குழந்ை­தக்கு தான் நடத்­தும் மீர் அறக்­கட்­டளை மூலம் உத­வி­யுள்­ளார்.

இது­தொ­டர்­பாக நடி­கர் ஷாருக்­கான் டுவிட்­ட­ரில் நேற்று கூறு­கை­யில் “பெற்­றோரை இழந்­த­வர்­களின் வேத­னை­க­ளைப் புரிந்து கொண்­ட­வர்­கள் மூலம் அந்­தக் குழந்­தைக்கு எப்­போ­தும் ஆத­ரவு இருக்­கும்,” எனத் தெரி­வித்­தி­ருந்­தார்.

இதை­ய­டுத்து ஷாருக்­கான் நடத்­தும் மீர் அறக்­கட்­டளை வெளி­யிட்ட அறி­வி்­ப்­பில் “அந்­தக் குழந்தை எங்­கள் அறக்­கட்­ட­ளையை வந்து சேர உத­வி­யவர்­களுக்கு நன்றி.

“இப்­போது அந்­தக் குழந்தை அவ­ரின் தாத்­தா­வின் ஆத­ர­வில் இருக்­கிறது, அந்­தக் குழந்­தைக்கு நாங்­கள் ஆத­ரவு வழங்­கு­கி­றோம்,” எனத் தெரி­வித்­துள்­ளது.

அதன்­பின் நடி­கர் ஷாருக்­கான் டுவிட்­ட­ரில் பதி­விட்ட கருத்­தில், “அந்­தக் குழந்­தைக்­காக எங்­க­ளு­டன் தொடர்­பில் இருந்த அனை­வ­ருக்­கும் நன்றி தெரி­விக்­கி­றேன்.

“பெற்­றோரை இழந்த துர­திர்ஷ்­ட­மான நேரத்­தில் அந்­தக் குழந்­தைக்கு அனைத்து மன­வ­லி­மை­யும் கிடைக்க நாம் அனை­வ­ரும் பிரார்த்­திப்­போம். அந்தக் குழந்தை எவ்­வாறு இத்துயரை உண­ரும் என்பது எனக்­குத் தெரி­யும், நம்­மு­டைய அன்­பை­யும் ஆத­ர­வை­யும் அந்தக் குழந்­தைக்கு வழங்­கு­வோம்,” எனத் தெரி­வித்­தி­ருந்­தார். ஷாருக்­கான் நடத்­தும் கேகே­ஆர் அணி, ரெட் சில்லி நிறு­வ­னம், மீர் அறக்­கட்­டளை, ரெட் சில்லி விஎப்­எஸ் ஆகி­யவை மூலம் கொரோனா ஊர­டங்கு காலத்­தில் ஏரா­ள­மான உத­வி­கள் மக்­க­ளுக்­குச் செய்­யப்­பட்­டுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!