சுடச் சுடச் செய்திகள்

மூடி: 22 ஆண்டுகள் இல்லாத பொருளியல் வீழ்ச்சி

இந்­தியா ஏற்­கெ­னவே பொரு­ளா­தார மந்தநிலை­யில்­தான் இருந்­தது. கொரோனா பாதிப்பு அதை மேலும் மோச­மாக்கி இருப்­ப­தா­க­வும் அனைத்­து­லக ஆய்வு நிறு­வ­ன­மான ‘மூடி’ அமைப்­பின் ஆய்வு அறிக்கை தெரி­விக்­கிறது.

புது­டெல்லி: இந்­திய பொரு­ளா­தார நிலை கீழ்­நிலை குறி­யீ­டான பி.ஏ.ஏ.-3 என்ற அள­விற்கு சென்­றி­ருப்­ப­தாக அனைத்­து­லக பொருளியல் ஆய்வு நிறு­வ­ன­மான ‘மூடி’ அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது.

1998ஆம் ஆண்டு ஜூன் மாதம் அணு­குண்டு சோதனை நடத்­தப்­பட்­டது. அப்­போது அமெ­ரிக்கா, ஜப்­பான் உள்­ளிட்ட பல்­வேறு நாடு­களும் இந்­தி­யா­வுக்கு பொரு­ளா­தார தடை விதித்­தன.

இத­னால் இந்­தியா பொரு­ளா­தார வீழ்ச்­சிக்கு உள்­ளா­னது. அப்­போது இந்­தி­யா­வின் தரத்தை பி.ஏ.ஏ.-2-ல் இ­ருந்து பி.ஏ. ஏ.-3க்கு மாற்றி இருந்­தது. அதே நிலைக்கு இப்­போது வந்­தி­ருப்­ப­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதா­வது 22 ஆண்­டு­கள் இல்­லாத அள­வுக்கு பொரு­ளி­யல் வீழ்ச்­சியை இந்­தியா சந்­தித்­துள்­ளது.

இந்­தியா ஏற்­கெ­னவே பொரு­ளா­தார மந்தநிலை­யில்­தான் இருந்­தது. கொரோனா பாதிப்பு அதை மேலும் மோச­மாக்கி இருப்­ப­தா­க­வும் அனைத்­து­லக ஆய்வு நிறு­வ­ன­மான ‘மூடி’ அமைப்­பின் ஆய்வு அறிக்கை தெரி­விக்­கிறது.

2016ஆம் ஆண்டு இந்­தி­யா­வின் உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி 8.3 விழுக்­கா­டாக இருந்­தது. 2019 நிதி­யாண்டு இறு­தி­யில் அது 4.2 ஆக குறைந்­தது. தற்­போ­தைய நிலை­யில் 4.0 விழுக்­கா­டாக இன்­னும் வீழ்ச்சி அடை­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

2021ஆம் ஆண்டு உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி 8.7 விழுக்­கா­டாக இருக்க வேண்­டும் என்று திட்­ட­மி­டப்­பட்­டது. இந்த ஆண்டு இறு­திக்­குள் 6 விழுக்­காடு அள­விற்கு உயர்த்­தி­விட வேண்­டும் என்­றும் திட்­ட­மிட்­டி­ருந்­த­னர்.

ஆனால் பொரு­ளா­தார மறு­சீ­ர­மைப்­புத் திட்­டங்­கள் சரி­யாக செயல்­ப­ட­வில்லை. அது மந்த நிலை­யி­லேயே இருந்த கார­ணத்­தால் ஏற்­கெ­னவே பொரு­ளா­தா­ரத்­தின் குறை­வான வளர்ச்­சி­யையே கொண்­டி­ருந்­தது. இப்­போது கொரோனா பிரச்­சினை இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்ச்­சியை மிக­வும் பின்­ன­டைய செய்­தி­ருப்­ப­தாக அந்த ஆய்வு நிறு­வ­னத்­தின் அறிக்கை தெரி­வித்­துள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon