சுடச் சுடச் செய்திகள்

கட்டணம் அதிகரிப்பு; விமானப் பயணிகள் தவிப்பு

சென்னை: பேருந்­து­கள், ரயில்களில் நீண்ட­நே­ரம் பய­ணிப்­பதைவிட விமா­னத்­தில் விரைந்து சென்று குடும்­பத்­தி­ன­ரு­டன் நேரத்­தைச் செல­வி­ட­லாம் என்ற கார­ணத்­திற்­கா­கவே பய­ணி­கள் பல­ரும் உள்­நாட்டு விமா­னங்களில் பய­ணம் மேற்கொள்ள ஆர்­வம் காட்டி வரு­கின்­ற­னர்.

இருப்பினும் விமான நிறு­வ­னங்­கள் தங்­க­ளி­டம் வசூ­லிக்­கும் கட்­ட­ணம் இத­யத்தை கனக்­க வைப்பதாக பய­ணி­கள் கூறியுள்ளனர் என்று ஊட­கத் தக­வல்­கள் குறிப்­பிட்டுள்ளன.

டெல்லி, அந்­த­மான், மதுரை, கோவை, தூத்­துக்­குடி உள்­ளிட்ட இடங்களுக்கான விமா­னக் கட்­ட­ணங்­களை வழக்­க­மான கட்­ட­ணத்­தை­விட கூடுதலாக வசூலிப்­ப­தா­க­வும் இத­னால் விமா­னப் பய­ணம் மேற்­கொள்­ளவே தங்களுக்கு தயக்கமாக உள்ள தாகவும் பய­ணி­கள் கூறியுள்ளனர்.

அதே­வே­ளை­யில், ஒரு­பக்­கம் கட்­ட­ணம் மிரட்­டி­னா­லும் மற்­றொரு பக்­கம் கொரோனா கிருமி உயி­ருக்கு மிரட்­டல் விடுப்­ப­தால் விலை­யைப் பற்றி கவ­லைப்­ப­டா­மல் எவ் ­வ­ளவு பணம் கேட்­டா­லும் கொடுத்துவிட்டு டிக்­கெட்­டு­களை எடுத்துக்கொண்டு சில பய­ணி­கள் வெளிமாநிலங்களுக்கு பய­ணம் புறப்­பட்டுச் செல்­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இத­னால்­தான் சென்னையில் இருந்து செல்­லும் விமா­னங்­களில் பய­ணி­கள் அதி­க­மா­க­வும் சென்­னைக்கு வரும் விமா­னங்க ளில் பய­ணி­கள் குறை­வா­க­வும் இருப்­ப­தா­க­ தகவல்கள் சுட்டியுள்ளன.

சென்னை விமா­ன­நி­லை­யத்­தில் இருந்து நேற்று 48 உள்­நாட்டு விமா­னங்­கள் இயக்­கப்­பட்­டன. அதில் டெல்லி, கோல்­கத்தா, ஹைத­ரா­பாத், திருவனந்­த­புரம், மதுரை, கோவை, திருச்சி உள்­ளிட்ட பகுதிகளுக்கு 24 விமா­னங்­களில் செல்வதற்கு 3,100 பய­ணி­கள் டிக்­கெட் முன்பதிவு செய்தனர்.

நேற்று ஒரேநாளில் சென்னை விமான நிலை­யத்­தில் இருந்து 48 உள்­நாட்டு விமா­னங்­களில் 5,000க்­கும் அதி­க­மான பய­ணி­கள் பய­ணம் செய்­த­னர். கடந்த ஒரு வாரத்­தில் நேற்­று­தான் இந்தளவு அதிகளவி­லான பய­ணி­கள் பய­ணம் செய்­த­னர்.

இதற்கிடையே, சென்­னை­யில் இருந்து கோல்­கத்தா செல்­வ­தற்கு குறைந்த கட்­ட­ண­மாக முத­லில் ரூ.6,500 இணை­யத்­தில் காட்­டப்­பட்­டது. பயணிகள் பதிவு செய்த ­போது அந்த டிக்­கெட் இல்­லா­த­தால் அடுத்த கட்­ட­ண­மாக ரூ.15,500 டிக்­கெட்டை பதிவு செய்­யும்­படி இணை­யத்­ தகவல்கள் கூறின. அந்த டிக்­கெட்­டும் ஒரு சிலருக்கு மட்­டுமே கிடைத்ததைத் தொடர்ந்து ரூ.29,500 டிக்­கெட்­தான் உள்­ளது என்று கூறி அதிக விலையில் டிக்­கெட் வாங்க கட்­டா­யப்­படுத்­தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், 14 நாட்­கள் தனி­மைப்­ ப­டுத்­து­தல், கைகளில் முத்­திரை குத்­து­வது ஆகி­யவையும் பயணிகளை கடும் அதி­ருப்­தியில் ஆழ்த்தியுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon