இந்தியாவில் ஒரே நாளில் 8,909 தொற்றுச் சம்பவங்கள்

மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்தது; பலி 6,000ஐ நெருங்கியது

புது­டெல்லி: இந்­தி­யா­வில் ஒரே நாளில் 8,909 கொரோனா தொற்­று பாதிப்புகள் தெரி­ய­வந்­துள்­ளது. இத­னை­ய­டுத்து பாதிப்பு எண்­ணிக்கை இரண்டு லட்­சத்­தைக் கடந்து 2,08,252 ஆக உள்­ளது.

கடந்த 24 மணி நேரத்­தில் மேலும் 217 பேர் பலி­யா­ன­தை­ய­டுத்து பலி எண்­ணிக்கை 5,833 ஆக அதி­க­ரித்­துள்­ளது என்­றும் சுமார் 1 லட்­சத்து 398 பேர் குண­மடைந்­துள்­ள­னர் என்­றும் சுகா­தார அமைச்­சு தெரி­வித்­துள்­ளது.

மகா­ராஷ்­டிர மாநி­லம் நோய்த்­தொற்­றில் தொடர்ந்து உச்­சத்­தில் உள்­ளது. மும்­பையை பொறுத்­த­வரை நேற்று மட்­டும் புதி­தாக 1,109 பேர் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர்.

மகா­ராஷ்­டி­ரா­வில் கொரோனா பாதிப்பு 72,300 ஆக உயர்ந்­துள்­ளது. மகா­ரா­‌ஷ்­டி­ரா­வில் 2,474 பேர் கொரோ­னா­வுக்கு பலி­யாகி உள்­ள­னர்.

நேற்று மட்­டும் இங்கு 2,287 பேருக்கு கிரு­மித் தொற்­றுப் பாதிப்­பது இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. அவர்­களில் 47 பேர் காவ­லர்­கள்.

நாட்­டின் பெரும்­பா­லான பகு­தி­களில் கொரோனா நோய்த்­தொற்று பர­வல் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. இதில் கொரோனா கிரு­மித்­தொற்று தடுப்­புப் பணி­யில் ஈடு­பட்டு வரும் காவ­லர்­கள், மருத்­து­வர்­கள், தூய்­மைப் பணி­யா­ளர்­களும் தொற்­றுக்கு ஆளாகி வரு­கின்­ற­னர்.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை 2,556 காவலர்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 காவலர்கள் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர்.

இரண்­டா­வது இடத்­தில் தமிழ் நாடு உள்­ளது. இங்கு 24,586 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். 197 பேர் பலி­யா­யி­னர். நேற்று மட்­டும் 1,091 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளது. இங்கு 22,132 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 556 பேர் பலியாகிவிட்டனர். நேற்று மட்டும் 1,298 பேர் பாதிக்கப்பட்டனர்.