‘இந்தியாவை ‘பாரத்’ஆக மாற்றுவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்’

புது­டெல்லி: இந்­தி­யா­வின் பெயரை மாற்­றக் கோரி டெல்­லி­யைச் சேர்ந்த நமா என்­ப­வர் உச்ச நீதி­மன்­றத்­தில் பொது­நல வழக்கு தொடர்ந்­தார். அவர் தாக்­கல் செய்­தி­ருந்த மனு­வில், இந்­தியா என்ற ஆங்­கில பெயர் காலனி ஆதிக்­கத்தை நினை­வு­ப­டுத்­து­வ­தாக உள்­ள­தா­க­வும் நாட்டு மக்­கள் காலனி ஆதிக்­கச் சிந்­த­னை­யில் இருந்து வெளி­வர நாட்­டின் பெயரை ‘பாரத்’ என மாற்ற வேண்­டும் என­வும் கோரி­யி­ருந்­தார்.

“நாட்­டின் பெயர்­கள் வெவ்­வேறு ஆவ­ணங்­களில் வெவ்­வேறு வித­மாக உள்­ளன. ஆதார் அட்­டை­யில் ‘பாரத் சர்க்­கார்’ என்று உள்­ளது. ஓட்­டு­நர் உரி­மத்­தில் ‘யூனி­யன் ஆஃப் இந்­தியா’, கடப்­பி­தழ்­களில் ‘இந்­திய குடி­ய­ரசு’ என இருப்­பது குழப்­பத்தை உரு­வாக்­கு­கிறது. ஒரு­வர் தேசத்­தின் பெயரை அறிந்­து­கொள்ள ஒரே மாதி­ரி­யான பெயர் இருக்க வேண்­டும்.

“நாட்­டின் சுதந்­தி­ரத்­திற்­காக போரா­டி­ய­வர்­க­ளின் போராட்­டத்­திற்கு மதிப்­ப­ளிக்­கும் வகை­யில் நாட்­டின் பெயரை மாற்ற வேண்­டும்.

“நாட்­டின் பெயரை பாரத் என மாற்­றும் வகை­யில் அர­ச­மைப்­புச் சட்­டத்­தில் திருத்­தம் கொண்­டு­வர மத்­திய அர­சுக்கு உத்­த­ர­விட வேண்­டும்,” என்­றும் மனு­தா­ரர் கூறி­யி­ருந்­தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதி­ப­தி­கள் தள்­ளு­படி செய்­த­னர். அதே­ச­ம­யம், நாட்­டின் பெயரை பாரத் என மாற்­றக் கோரிய மனு­வின் நகலை, மத்­திய அர­சின் சம்­பந்­தப்­பட்ட துறைக்கு அனுப்பி வைக்­கும்­படி மனு­தா­ர­ருக்கு உத்­த­ர­விட்­ட­னர். இந்த மனுவை கோரிக்கை மனு­வாகக் கருதி மத்­திய அரசு முடிவு எடுக்­கும் என்­றும் நீதி­ப­தி­கள் தெரி­வித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!