புதுடெல்லி: கொவிட்-19 நெருக்கடியால் வெளிநாட்டினருக்கான இந்திய வருகை மற்றும் விசா ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இந்தியா தளர்த்த முடிவுசெய்துள்ளது. இதன்மூலம் சுகாதாரத்துறையைச் சேர்ந்த திறனாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்பர்கள் ஆகியோர் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படுவர். மேலும் பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரின் வர்த்தக மற்றும் தொழில்ரீதியிலான பயணங்களுக்கும் விசா வழங்கப்படும். அதற்கு அவர்கள் இந்திய நாட்டில் இயங்கும் நிறுவனங்களின் அழைப்பிதழைப் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அழைப்பின்பேரில் விசா பெறலாம் என்று இந்திய உள்துறை அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. வர்த்தக அல்லது வேலை பார்ப்பதற்கான விசா போன்றவற்றுக்குப் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே நீண்டகால பிசினஸ் விசா வைத்திருப்போர் அதை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். முன்பு பெற்ற இ-விசாவைப் பயன்படுத்த முடியாது.
வர்த்தக ரீதியிலான பயணங்களுக்கு விசா
1 mins read
-

