நச்சு வாயு கசிவு: தென்கொரிய நிறுவனம் மீது அபராதம்

நச்சு வாயு கசிவு: தென்கொரிய நிறுவனம் மீது அபராதம்

1 mins read
07f1f00d-a0b3-4652-83aa-0f78daa58bbe
-

ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்திலுள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவுக்கு தென்கொரிய நிறுவனம் எல்ஜி பாலிமர் பொறுப்பு என்று இந்திய சுற்றுச்சூழல் நீதிமன்றம் கூறியுள்ளது. இதன் காரணமாக அந்நிறுவனத்திற்கு மீது 500 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மே 7ஆம் தேதியன்று நடந்த இந்த அசம்பாவிதத்தில் குறைந்தது 11 பேர் மாண்டர். மேலும் ஆயிரம் பேர் இந்த வாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த விஷ வாயுக்கசிவால் தொழிற்சாலையின் மூன்று கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்திலுள்ள கிராமத்துவாசிகள் மயங்கி வீதிகளில் விழுந்து கிடந்ததைக் காட்டும் படங்களை இந்திய ஊடகங்கள் வெளியிட்டன.

சம்பவம் நடந்த மறுநாளே சுற்றுச்சூழல் வழக்குகளைக் கையாளும் இந்தியாவின் தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கை விசாரித்தது. விதிக்கப்பட்டுள்ள இந்த அபராதத் தொகை, சுற்றுச்சூழல் புனரமைப்புக்கும் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுக்கும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.