கொடூரமாக இறந்த யானைக்கு மணற்சிற்ப அஞ்சலி

கொடூரமாக இறந்த யானைக்கு மணற்சிற்ப அஞ்சலி

1 mins read
f160cb39-8aee-435c-99db-77c56b78b3e5
-

கேரளாவில் கர்ப்பிணி யானைக்கு பட்டாசுகளைக் கொண்டுள்ள அன்னாசியால் கொல்லப்பட்ட சம்பவத்தால் உலகெங்குமுள்ள பலர் தங்களது வேதனையைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றன. இந்நிலையில் பீகாரின் சாப்ராவைச் சேர்ந்த மணல் கலைஞர் அசோக், இறந்த மிருகத்தை விநாயகர் உடன் சித்தரித்தார்.

இறந்த யானைக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அசோக் இந்த மணற்சிற்பத்தை உருவாக்கினார். சாப்ராவில் உள்ள சீதி காட்டில் இந்த கலைப்படைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடையாளம் வெளியிடப்படாத சந்தேக நபர் ஒருசிலர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்குப் பொறுப்பான மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்தார்.