கதவைத் திறக்கிறது கர்நாடகா

1 mins read
c6383643-463d-492f-ab86-e888a907d492
இந்தியாவில் விரைவில் வழிபாட்டு இடங்கள், விருந்தோம்பல் சேவைகள், கடைத்தொகுதிகள் எல்லாம் கட்டம் கட்டமாகத் திறந்துவிடப்பட இருக்கின்றன. கட்டுப்படுத்தப்பட்ட வட்டாரம் என்று வகைப்படுத்தப்படும் பகுதிகளைத் தவிர இதர பகுதிகளில் விரைவில் வழமை நிலை திரும்பும் என்று நம்பப்படுகிறது. கோல்கத்தாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் அலங்காரப் பொருள் விற்பனைக் கடையில் மக்கள் பலரும் காணப்பட்டனர். படம்: இபிஏ -

மகாராஷ்டிரா தவிர எல்லா மாநிலங்களுக்கும் பேருந்து சேவை தொடங்க நாட்டம்

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் இருந்து மகா­ராஷ்­டி­ரா­வைத் தவிர வெளி மாநி­லங்­க­ளுக்­குப் பேருந்துச் சேவை­களைத் தொடங்­கும்­படி அதிகா­ரி­க­ளுக்கு அந்த மாநில முதல்­வர் எடி­யூ­ரப்பா உத்­த­ரவு பிறப்­பித்து இருக்­கி­றார்.

பெங்­க­ளூ­ரு­வில் நடந்த போக்கு ­வ­ரத்­துத் துறை ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட முதல்­வர், கொரோனா கிரு­மித்­தொற்று சூழ­லில் பேருந்­து­களில் பய­ணம் செய்ய பொது­மக்­கள் தயங்­கு­வதாகத் தெரி­வித்­தார்.

ஆனால் பொது­மக்­க­ளின் இந்தப் பயத்தை அகற்றி அவர்­க­ளி­டம் தன்­னம்­பிக்­கையை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.

கர்­நா­ட­கா­விற்கு மகா­ராஷ்­டிர மாநி­லம்­தான் கவலை தரு­வ­தாக இருக்­கிறது என்று குறிப்­பிட்ட முதல்­வர், மகா­ராஷ்­டி­ரா­வில் கிரு­மித்­தொற்று அதி­க­மாக இருப்­ப­தை­யும் அங்­கி­ருந்து கர்­நா­ட­கா­வுக்­குள் கிருமி நுழை­வ­தற்கு வாய்ப்­பு­கள் அதி­கம் இருப்­ப­தை­யும் சுட்­டி­னார். கர்நாடகாவில் மொத்தம் 4,063 பேரைக் கிருமி தொற்றியுள்ளது. 53 பேர் பலியாகிவிட்டனர்.

கர்­நா­ட­கா­வில் ஏற்­கெ­னவே உள்­ளூர் பேருந்­துச் சேவை­கள் தொடங்கி இருக்­கின்­றன. என்­றா­லும் அவை நட்­டத்­தில் இயங்கு ­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

இத­னி­டையே, கர்­நா­டக மாநிலத்­தில் 10,110 கி.மீ. மாவட்டச் சாலை­களை மாநில நெடுஞ்­சாலை ­க­ளா­கத் தரம் உயர்த்த முடிவு செய்து இருப்­ப­தா­க­வும் முதல்­வர் குறிப்­பிட்­டார்.

அதே போல 1,650 கி.மீ. கிராமப்­புற சாலை­கள் மாவட்­டச் சாலை­க­ளா­கத் தரம் உய­ரும் என்­றும் அவர் தெரிவித்தார்.

கர்­நா­ட­கா­வில் 4,813 கி.மீ. தேசிய நெடுஞ்­சா­லை­களை அமைக்­கும் பணி­கள் நடந்து வரு­வ­தா­க­வும் முதல்­வர் குறிப்­பிட்­டார்.