நிசர்கா புயல்:மகாராஷ்டிராவில் நால்வர் மரணம்; 7 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வைத் தாக்­கிய நிசர்கா என்ற புயல் கார­ண­மாக அந்த மாநி­லத்­தில் நான்கு பேர் மாண்­டு­விட்­ட­னர். எட்டு பேர் காயம் அடைந்­து­விட்­ட­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். ஏழு மாவட்­டங்­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்டு இருக்­கின்­றன.

பாதிக்­கப்­பட்ட மாவட்­டங்­களில் மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்­டு­விட்­டது. சாலை­க­ளி­லும் வீடு­க­ளி­லும் ஏரா­ள­மான மரங்­கள் விழுந்து கிடக்­கின்­றன. பல வீடு­க­ளி­லும் கூரை­களில் போடப்­பட்டு இருந்த தக­ரங்­கள் புய­லில் அடித்­துச் செல்­லப்­பட்­டன. புதன்­கி­ழமை புயல் தாக்­கி­ய­தற்கு முன்­ன­தாக அந்த ஏழு மாவட்­டங்­க­ளை­யும் சேர்ந்த ஏறக்­கு­றைய 85,000 பேர் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்டு இருந்­த­னர். புய­லால் ஏற்­பட்ட பாதிப்­பு­களை மகா­ராஷ்­டிர முதல்­வர் உத்­தவ் தாக்­க­ரே­வும் துணை முதல்­வர் அஜித் பவா­ரும் நேற்று மதிப்­பிட்­ட­னர்.

மாவட்ட ஆட்­சி­யர்­கள், வட்­டார ஆணை­யர்­க­ளு­டன் அவர்­கள் பேச்சு­வார்த்தை நடத்­தி­னர். உட­னடி­யாக மீட்­புப் பணி­களை நடத்தி முடிக்­கும்­படி முதல்­வர் உத்­த­ர­விட்டுள்ளார்.

“கொரோனா கிருமி அதி­க­மாக தொற்றி இருக்­கும் மாநி­லமாக மகா­ராஷ்­டி­ரா­ இருக்­கிறது.

கொவிட்-19 கிருமியை எதிர்த்து அந்த மாநி­லம் கடு­மை­யா­கப் போராடி வரு­கிறது. இந்த நிலை­யில் புய­லும் சேர்ந்­து­கொண்­டது.

“இருந்­தா­லும் மக்­கள் ஐக்­கி­ய­மாக, துணிச்­ச­லாக எதிர்த்து நின்று இந்­தப் பேரி­டர்­க­ளைச் சமா­ளித்து வரு­கி­றார்­கள்,” என்று முதல்­வர் தெரி­வித்­தார்.

இதற்­காக மகா­ராஷ்­டிர மக்­க­ளுக்கு அவர் நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார்.

மகா­ராஷ்­டி­ராவைக் குறி வைத்த புயல் அந்த மாநி­லத்­தில் பெரும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­வி­டும் என்று அச்­சம் நில­வி­யது என்­றாலும் புயல் அடிக்­கத் தொடங்­கி­ய­துமே காற்­றின் வேகம் எதிர்­பார்த்த அள­விற்கு இல்லை.

இருந்­தா­லும் குறைந்­த­பட்­சம் 10,000 மரங்­கள் வேரோடு சாய்ந்து விழுந்ததா­க­வும் நேற்­றும் மழை­யும் இலே­சான காற்­றும் தொடர்ந்து வீசி­ய­தா­க­வும் கூறப்­பட்­டது.