மர்மக் கொலைகள்: வடிகால் தொட்டிக்குள் இரண்டு சடலங்கள்

மர்மக் கொலைகள்: வடிகால் தொட்டிக்குள் இரண்டு சடலங்கள்

1 mins read
353b327c-1d32-4e8a-9c26-71dd0b0898ad
-

மும்பையின் புறநகர்ப்பகுதியிலுள்ள உணவகம் ஒன்றுக்குள் உள்ள பெரிய வடிகால் தொட்டிக்குள் இரண்டு ஆடவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த 42 வயது ஹரிஷ், ஷெட்டியும் 58 வயது என். பண்டித்தும் என்ற அந்த இரண்டு ஆடவர்கள் உணவகத்தின் ஊழியர்களாகப் பணியாற்றினர். அவர்களைத் தொடர்பு கொள்ள இயலாத உணவக உரிமையாளர், பின்னர் அந்த ஊழியர்கள் இருவரும் கொல்லப்பட்டிருப்பதாக அடையாளம் தெரியாத ஒருவர் தொலைபேசி மூலம் தம்மிடம் தெரிவித்ததாக போலிசாரிடம் புகார் கொடுத்தார். இதன் பிறகு அவ்விருவரின் சடலங்களை போலிசார் உணவகத்திற்குள்ளேயே கண்டுபிடித்தனர்.

முடக்கநிலையின்போது தங்கியிருந்த அந்த இரண்டு ஊழியர்கள் எப்படி இறந்தனர் என்ற விவரம் தெளிவாக அறியப்படவில்லை. ஆயினும், அவர்களது உடலில் காயங்கள் இருப்பதை பிரேத பரிசோதனைகள் காட்டுகின்றன.

இந்தச் சம்பவத்தைப் போலிசர் கொலை என வகைப்படுத்தியுள்ளனர்.