போலிஸ், மருத்துவர்களைக் குறிவைக்கும் கொரோனா கிருமி

1 mins read
6308558f-f708-475c-8332-5ce42f164a30
வெளிமாநில ஊழியர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்ப மும்பையில் பல இடங்களிலும் கூடி வரு கிறார்கள். இத்தகைய கூட்டத்தையும் போலிசார் கட்டுப்படுத்த வேண்டி இருக்கிறது. படம்: இபிஏ -

மும்பை: இந்­தி­யா­வில் கெரோனா கட்­டுப்­பாட்டு நிபந்­த­னை­கள் மீறப்­படா­மல் பின்­பற்­றப்­ப­டு­வதை உறுதி செய்­வ­தில் போலி­சார் மிக முக்­கிய பணி­யாற்­று­கி­றார்­கள்.

அதே வேளை­யில், மருத்­து­வர்­களும் சுகா­தாரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­களும் உயிர்­நா­டி­யான உத­வி­களைச் செய்து வரு­கி­றார்­கள். இந்த நிலை­யில், கிரு­மி­கள் இந்த இரண்டு வகை ஊழி­யர்­க­ளை­யும் குறி வைப்­ப­தா­கத் தெரி­கிறது.

மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் சுமார் 2,557 போலி­சாரை கிருமி தொற்றி இருக்­கிறது. 30 பேருக்­கும் அதிக போலிஸ் அதி­கா­ரி­கள் மர­ணம் அடைந்­து­விட்­ட­தாக போலிஸ் துறை தெரி­வித்து உள்­ளது.

அதே­வே­ளை­யில், ஹைத­ரா­பாத்­தில் மொத்­தம் 48 முது­நிலை படிப்பு மருத்­து­வர்­க­ளைக் கிருமி தொற்றி இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. நாடு முழு­வ­தி­லும் குறிப்­பி­டத்­தக்க அள­வில் சுகா­தாரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் பாதிக்­கப்­பட்டு வரு­வ­தாகத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

தங்­க­ளால் முடிந்­த­வரை பாடு பட்டு வரு­வ­தா­க­வும் போதிய பாது­காப்பு இல்­லா­த­தால் கிருமி பாதிப்­புக்­குத் தாங்­கள் ஆளா­வ­தாகவும் கூறும் இத்­த­கைய ஊழி­யர்­கள், சில இடங்­களில் போராட்­டங்­களில் ஈடு­பட்­டும் வரு­கி­றார்­கள்.

தங்­க­ளைக் கிருமி தொற்­றி­னால் சிகிச்சை பெற தங்­க­ளால் முடிய வில்லை என்று கூறும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள், சிகிச்சைக்கு ஆகும் செல­வை­யும் தாங்­களே ஏற்­க­வேண்டி இருப்­ப­தாகவும் சொல்­கி­றார்­கள். போதிய சாத­னங்­களும் வச­தி­களும் மருத்­து­வ­ம­னை­களில் இல்லை என்­றும் இவர்­கள் கவலைப்­ப­டு­கி­றார்­கள்.